Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மயிலாப்பூரில் திமுக இறங்கிடுச்சு.. ஜோசப் விஜய், SIR உட்பட சிங்கிள் ஓட்டும் விடக்கூடாது! பலே ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. தமிழக அரசியல் கட்சிகள் திமுக படுமும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.. விட்டதை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் அதிமுகவும், இருப்பதை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் திமுகவும் களமிறங்கி உள்ளன.. இதில் திமுக முன்னெடுக்கும் வியூகங்கள், தமிழக கட்சிகளின் கவனத்தையும் மெல்ல திருப்பி வருகின்றன.

முதலாவதாக,, எஸ்ஐஆர் விஷயத்தில் திமுக அதிக தீவிரத்தை மேற்கொண்டு வருகிறது.. ஆரம்பத்திலிருந்தே, எஸ்ஐஆர் பற்றி விமர்சனத்தையும், சந்தேகத்தையும் திமுக எழுப்பி வருகிறது.. எனினும், ஒரு வாக்கு கூட தவறி விடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தற்போது இறங்கியுள்ளது.

DMK Stalin Joseph Vijay

சிங்கிள் ஓட்டும் மிஸ் ஆக கூடாது

99.27 சதவீத படிவங்கள் இணையத்தில் அப்லோடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.. இந்நிலையில், தமிழகம் முழுவதும் வாக்காளர்களால் படிவங்கள் பெறப்படாத மற்றும் பிஎல்ஓ-விடம் திரும்ப ஒப்படைக்காத படிவங்களை கண்காணித்து, ஒரு ஓட்டு கூட தவறவிடாமல் 100 சதவீதம் வெப்சைட்டில் அப்லோடு செய்ய தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் அணிக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம்.

இதே வியூகத்தின் தொடர்ச்சியாக, "என் ஓட்டுச்சாவடி வெற்றி ஓட்டுச்சாவடி" என்ற திட்டம் செயல்பாட்டில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

8463 ஓட்டுச்சாவடிகளை அடிப்படை அலகாக கொண்டு, ஒவ்வொரு சாவடியிலும் வாக்காளர் சரிபார்ப்பு, நேரடி கலந்துரையாடல், தெருமுனை கூட்டங்கள் நடத்துவது என்பது திமுக தேர்தல் அரசியலை மிக நுட்பமான அளவிற்கு கொண்டு சென்றுள்ளது..

மயிலாப்பூர் டார்கெட்

அதுமட்டுமல்ல, 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு, வெறும் அரசியல் கோஷமாக இல்லாமல், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் குறைந்தபட்சம் 50 சதவீத வாக்குகளையாவது பெற வேண்டும், அதிலும் மயிலாப்பூரில் 440 ஓட்டுகள் பெற வேண்டும் என்றும் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து உத்தரவிட்டதாகவும் தெரிகிறது.

இதற்கு காரணம், மயிலாப்பூர் அதிக போட்டி நிலவும், கலப்பு வாக்காளர் அமைப்பு கொண்ட பகுதியாகும்.. இங்கு வாக்குகள் அவ்வளவு சுலபமாக கிடைத்துவிடாது.. அதனால்தான் இங்கு 440 ஓட்டுகளாவது பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தவெக விஜய்யின் அரசியல் வருகையானது, புதிய அரசியல் சவாலாக திமுகவுக்கு உருவெடுத்துள்ளது.. குறிப்பாக கிறிஸ்தவ வாக்குகள் திமுகவிலிருந்து சிதறி விடக்கூடாது என்ற அச்சம், திமுக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் வெளிப்படையாக தெரிகிறது.

ஜோசப் விஜய் - ஓட்டுகள்

ஏற்கனவே தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்சி அந்தஸ்து, கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்கு மானியம், தேவாலயங்களுக்கு ஆதரவு போன்ற கோரிக்கைகளை திமுக வலியுறுத்துவது, சிறுபான்மையினர் உரிமை அரசியலுடன் தேர்தல் கணக்கையும் இணைக்கும் முயற்சியாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், மனித நேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழாவை நெல்லையில் திமுக நடத்த முடிவு செய்துள்ளது.. கிறிஸ்தவ மக்கள் அதிகம் உள்ள நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளை மையமாக வைத்து முதல் கட்டமாக இந்த விழாவை நடத்த போகிறதாம் திமுக..

அதாவது, விஜய்யை கிறிஸ்தவர் அடையாளத்துடன் அரசியல் ரீதியாக நிலைநிறுத்தும் முயற்சிக்கு முன்பே, திமுக களத்தில் இறங்கி விட்டதாக கூறுகிறார்கள்.

திமுக பலே ஸ்ட்ராட்டஜி

மொத்தத்தில், ஸ்டாலினின் இந்த தேர்தல் திட்டமானது, வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது முதல் சமூக அடையாள அரசியல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்த, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அரசியல் கணக்காகவே பார்க்கப்படுகிறது.

எனினும், இந்த வியூகங்கள் அனைத்துமே திமுகவுக்கு முழு பலனை பெற்று தருமா? மயிலாப்பூரில் திட்டமிட்ட இலக்கை வெல்லுமா? கிறிஸ்துவ வாக்குகளை உறுதியாக தன் பக்கம் ஈர்த்து கொள்ளுமா? என்பதெல்லாம் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+