மயில் எங்கே? மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் இறங்கிய.. 70+ தீயணைப்பு வீரர்கள்! என்னாச்சு?
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை ஒன்று காணாமல் போனது தொடர்பாக அந்த கோவில் குளத்தில் தீயணைப்பு படையினர் தீவிர தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் கடந்த 2004ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதையடுத்து கோவிலில் புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் காணாமல் போனது. இது லிங்கத்தை மலரால் அர்ச்சனை செய்யும் தோற்றம் கொண்ட மயில் ஆகும்.

மயில்
இந்த மயில் காணாமல் போன பின்பு அங்கு வேறு மயில் முறையின்றி, விதிகளை மீறி மாற்றி வைக்கப்பட்டது. இது பாம்பை அலகில் கொண்டு இருக்கும் மயில் ஆகும். இந்த மயிலை முறையின்றி வைத்ததாக கூறி வழக்கு தொடுக்கப்பட்டது. திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், இந்த மயில் ஆகம விதிகளுக்கு எதிராக வைக்கப்பட்டதாக வழக்கு தொடுத்தார்.

வழக்கு
சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முன் விசாரணை செய்யப்பட்டது. இதில் தமிழ்நாடு காப்பிவல்துறை தரப்பு, விசாரணை செய்ய 6 வாரம் அவகாசம் கேட்டது. அதன்படியே விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று நடந்த கோர்ட் விசாரணையில், கோவில் குளத்தில் சிலை இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். எங்கள் விசாரணையின் படி கோவில் குளத்தில் சிலை இருக்கலாம் என்று கருதுகிறோம் என்று தமிழ்நாடு காவல்துறை தரப்பு கூறியது.

சிலை காணவில்லை
மேலும் கோவில் குளத்தில் சோதனை செய்யவும் போலீசார் தரப்பு அனுமதி கேட்டனர். இதையடுத்து போலீசார் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கோவில் குளத்தை சோதனை செய்ய அனுமதி வழங்கினர். இதையடுத்து கோவில் குளத்தில் நவீன அறிவியல் முறைப்படி தேடவும், அங்கு முழுமையாக தேடுதல் பணிகளை செய்து 2 வாரங்களில் முடிவுகளை சமர்ப்பிக்கவும் போலீசார் தரப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

தேடுதல் வேட்டை
இதையடுத்து மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை காணாமல் போனது தொடர்பாக அந்த கோவில் குளத்தில் தீயணைப்பு படையினர் தீவிர தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அங்கு மொத்தம் 70க்கும் அதிகமான தீயணைப்பு படையினர் களமிறங்கி தேடுதல் பணிகளை செய்து வருகின்றனர். இதனால் அங்கு பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சிறிய ரக போட்டுகள் மூலம் அங்கு அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications