Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜார்க்கண்டில் தமிழக மருத்துவ மாணவர் மர்ம மரணம்: என்ன நடந்தது? முழு விசாரணை தேவை.. டிடிவி தினகரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மருத்துவ மாணவர் மதன்குமார் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துவதாக டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் புகழ் பெற்ற ஆர்ஐஎம்எஸ் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் விடுதியில் தங்கி, தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மதன் குமார் தடயவியல் மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியின் விடுதியில், ஹாஸ்டல் எண் 5ல் உள்ள அறை எண் 69ல் டாக்டர் மதன்குமார் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் அவரது உடல் எரிந்த நிலையில் சடலமாக இருப்பதாக ராஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 Mysterious death of TN medical student in Jharkhand: TTV Dhinakaran urges proper investigation

இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் மதன்குமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேநேரம் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மருத்துவர் மதன் குமார் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தீ வைத்து கொளுத்தினர்?: யாரோனும் கொன்று எரித்து வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் டாக்டர் மதன்குமார் கொல்லப்பட்டது உறுதியானது. டாக்டர் மதன் குமார் முதலில் விடுதியின் மேல் மாடியில் கொல்லப்பட்டிருக்கிறார், பின்னர் அவரது உடலை எரிக்க முயற்சித்தவர்கள், விடுதியின் பின்புறமுள்ள முட்புதரில் அவரது உடலை வீசிவிட்டு தீ வைத்து கொளுத்தி உள்ளார்கள்.

 Mysterious death of TN medical student in Jharkhand: TTV Dhinakaran urges proper investigation

அதிர்ச்சியளிக்கிறது: விடுதியின் மேற்கூரையில் மொபைல் மற்றும் கால்தடங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடய அறிவியல் சோதனைக்கு போலீசார் அதனை அனுப்பி உள்ளனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, மருத்துவ மாணவர் மதன்குமார் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படித்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் மதன்குமாரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

உரிய இழப்பீடு வழங்கவும்: மதன்குமாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விடுதியின் மேற்கூரையில் இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக மாணவர் மதன்குமார் உயிரிழந்திருக்கலாம் என ஜார்கண்ட் மாநில காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் மருத்துவ மாணவர் மதன்குமார் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மதன்குமாரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+