அள்ளிக் குவித்த வாக்குகள்! தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறும் சீமானின் நாம் தமிழர் கட்சி!
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.9 சதவீதம் வாக்குகளை பெற்று தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை பெறுகிறது.
தமிழகம், புதுவையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி படுதோல்வி அடைந்தது. தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. அது போல் வேட்பாளர் தேர்வும் அந்த கட்சி 20 ஆண்கள், 20 பெண்கள் என சரிசம வாய்ப்பை கொடுத்தது.

வழக்கமாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறை புதிய சின்னம் ஒதுக்கப்பட்டது. மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது. தமிழகம், புதுவையில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தோல்வி அடைந்துள்ளது.
10 தொகுதிகளில் 40 ஆயிரம் வாக்குகளையும் 6 தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகளையும் 12 தொகுதிகளில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளையும் நாம் தமிழர் பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி 7 இடங்களில் 3ஆவது இடத்தை பெற்றது. நெல்லை தொகுதி, விளவங்கோடு சட்டசபை தொகுதி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகை, திருச்சி, புதுவை உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுகவை நாம் தமிழர் பின்னுக்கு தள்ளியது.
இந்த நிலையில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி 8.9 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8 சதவீத வாக்குகள் தேவை. அந்த வகையில் இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் என தெரிகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 6.58 சதவீதம் வாக்குகளை நாம் தமிழர் பெற்றிருந்தது.
இந்த தேர்தலில் சிவகங்கையில் அதிகபட்சமாக 1.63 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. இந்த தொகுதியில் எழிலரசி விசயேந்திரன் போட்டியிட்டார். கரும்பு விவசாயி சின்னம்தான் நாம் தமிழர் கட்சியின் சின்னமாக இருந்தது. சட்டசபை தேர்தலில் அந்த சின்னத்தில்தான் நாம் தமிழர் போட்டியிட்டது.
ஆனால் அதை லோக்சபா தேர்தலின் போது இழந்தது. காரணம் சட்டசபை தேர்தலில் தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட வாக்கு சதவீதம் இல்லை என்பதால் அந்த சின்னம் கிடைக்கவில்லை. அந்த சின்னத்தை கேட்டு நாம் தமிழர் கட்சிதான் முதலில் விண்ணப்பித்திருந்தது. ஆனாலும் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கவில்லை.
எனினும் இந்த சின்னம் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கிடைத்தது. ஒரு வேளை நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைத்திருந்தால் இன்னும் கூடுதல் வாக்குகளை பெற்றிருக்கக் கூடும் என தெரிகிறது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications