Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தளியில் நாம் தெலுங்கர் கட்சி! இக்கடிக்கு ரண்டி.. தெலுங்கில் மாட்லாடிய சீமான் தம்பி! வீடியோவை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்திருக்கிறார் அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான். ஏற்கனவே சில தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். இந்த நிலையில் தளி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது/ தமிழை தவிர்த்து பிற மொழி பேசுபவர்களை வந்தேறிகள் என பேசும் நாம் தமிழர் கட்சியினர் தெலுங்கில் வாக்கு சேகரிப்பது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை வேகப்படுத்தி வருகின்றன. அதில் நாம் தமிழர் கட்சியும் முக்கியமாக செயல்பட்டு வருகிறது. 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கட்சி ஆரம்ப காலம் முதல் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது.

அதே நிலைப்பாட்டை இந்த சட்டசபை தேர்தலிலும் தொடரப் போவதாக கட்சி தலைமையகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Tamil Nadu Assembly Election 2026 Naam Tamilar Telugu seeman

நாம் தமிழர் கட்சி

மொத்தம் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர்களின் பெயர்கள் வரும் 21 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் கட்சி மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளன. அந்த மாநாட்டில் கட்சியின் தேர்தல் திட்டங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. தற்போது கிடைத்த தகவலின்படி, அவர் தனது பிறந்த மாவட்டமான சிவகங்கை பகுதியில் உள்ள காரைக்குடி சட்டசபை தொகுதியைத் தேர்வு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

சீமான் திட்டம்

இதன் மூலம் சொந்த மாவட்டத்தில் இருந்து தேர்தல் களத்தில் இறங்கும் திட்டத்தில் அவர் உள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் 24.3 சதவீதம் வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றார். அந்த தேர்தலில் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் அரசியல் கவனத்தை ஈர்த்ததாக பார்க்கப்பட்டது. இந்த முறை தேர்தலில் சீமான் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சியினர் முன்கூட்டியே பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

தளி தொகுதி வேட்பாளர்

அது மட்டும் அல்லாமல் தளி, பழனி, திண்டுக்கல், முதுகுளத்தூர் உள்ளிட்ட பல்வேறு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். அந்த வகையில் தளி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக நரசிம்மன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது சீமானின் திருச்சி மாநாட்டை ஒட்டி தனது பகுதியில் உள்ள மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் நரசிம்மன். தளி பகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகமாக இருப்பதால் அதே சமூகத்தைச் சேர்ந்த நரசிம்மன் வேட்பாளராக நிறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தெலுங்கில் வாக்கு சேகரிப்பு

இதற்கிடையே திருச்சியில் நடைபெற உள்ள மாநாட்டுக்கு பொதுமக்கள் வரவேண்டும் என வீடு வீடாகச் சென்று அழைப்பு விடுத்து வருகிறார் நரசிம்மன். தெலுங்கு பேசும் மக்களிடம் தெலுங்கிலேயே பேசி அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார் தற்போது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

மொழி அரசியல்

"திருச்சியில் மாநாடு நடைபெறுகிறது. என்னை வேட்பாளராக அறிவித்திருக்கிறார்கள். அனைவரும் நிச்சயம் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்" என தெலுங்கில் அவர் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ், தமிழ்நாடு, தமிழர் என மூச்சுக்கு 300 தடவை தமிழ் பேசி வரும் சீமான் தமிழ் பேசாதோர் வந்தேறிகள் என பேசியதும், குறிப்பாக பட்டியலென மக்கள் குறித்து அவர் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் சீமானுக்கு கடும் கண்டனமும் எழுந்தது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தெலுங்கில் வாக்கு சேகரித்த காட்சிகளை வைத்து விமர்சித்து வருகின்றனர் நெட்டின்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+