நாம் தமிழர் ஆட்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் உயிருடன் இருக்க முடியாது: சீமான்
சென்னை: தமிழகத்தில் நாம் தமிழர் ஆட்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் உயிருடன் இருக்க முடியாது என்ற நிலைமையை உருவாக்குவோம் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: கருவி ஏந்திய களத்தில் நீரையும் சோறையும் மறுத்து அதனையே ஒரு கருவியாக ஏந்தியவர் திலீபன். அறவழியில் அகிம்சை முறையில் போராடி விடுதலை பெற்ற இந்தியப் பெருநாடு திலீபன் போராட்டத்தை கண்டுகொள்ளவே இல்லை.
ஒரு கப்பலில் ரூ21,000 கோடிக்கு ஹெராயின் போதைப் பொருள் வந்துள்ளது. இப்படி போதைப் பொருள் வந்திருப்பது இதுதான் முதல் முறையா? அல்லது இதற்கு முன்னர் வந்துள்ளதா? இதில் கணவன், மனைவி 2 பேர் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இது மிகுந்த வேடிக்கைக்குரியது. ரூ21,000 கோடிக்கு போதைப் பொருள் அதானி துறைமுகத்துக்கு வந்துள்ளது என்பது தனியார்மயமாக்கலின் விளைவு. இதனை யாருமே கண்டிக்கவில்லை.
|
பாஜகவின் நிஜ முகம்
அஸ்ஸாமில் முதியவர் ஒருவர் தாக்கப்பட்டது கொல்லப்பட்டிருக்கிறார். துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார். ஒருவர் செத்தபின்னும் போட்டு மிதித்தது என்பதுதான் பாஜகவின் நிஜ முகம். ஆனால் கட்டையை தூக்கிக் கொண்டு வந்த பெரியவர்தான் வன்முறையாளர் என்கிறார்கள். இது கொடுங்கோன்மை. இதனைக் கூட பெரும் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டிக்கவே இல்லை.

ஏன் திராவிட நாடு போடலை?
தினந்தோறும் பாலியல் கொடுமைகள் நடக்கிறது. பெண்களை நிர்வாணப்படுத்தி அடித்து துன்புறுத்தி கூட்டு வன்புணர்வு கொலை செய்கின்றனர். நாங்கள் தற்சார்பு பொருளாதாரம் என்று சொல்வதைத்தான் திமுக அரசு Made In Tamilnadu என்று சொல்கின்றனர். அன்று நாங்கள் சொன்ன போது சாத்தியமே இல்லாதது என கேலி பேசினர். இன்று தற்சார்பு குறித்து அவர்கள் பேசுகின்றனர். ஏன் மேட் இன் திராவிட நாடுன்னு போடலை?

பெரியார் சிலை விவகாரம்
பெரியாருக்கு சிலை வைத்துவிட்டுப் போங்க.. எளிமையாக வாழ்ந்த தலைவர்களுக்கு சிலை வைப்பது எப்படி சரியாகும்? இருந்த சொத்துகளை எல்லாம் ஏழைகளுக்கு எழுதி வைத்த முத்துராமலிங்க தேவருக்கு 3 கிலோவில் தங்க முக கவசம் ஏன்? பெரியாருக்கு ரூ39 கோடியில் சிலை வைப்பது ஏன்? கல்வி மறுக்கப்பட்ட தமிழ் சமூகத்துக்கு கல்வி கிடைக்க நிறுவனங்களை உருவாக்கினார் பெரியார்.

நாம் தமிழர் ஆட்சியில்...
அனைத்து கட்சி கொடிகளும் பறக்கக் கூடிய இடத்தில் ஏன் விடுதலை சிறுத்தைகள், எங்கள் கட்சிகள் பறக்க கூடாது. நாம் தமிழர் கட்சியில் பாலியல் வன்புணர்வில் எவன் ஈடுபட்டாலும் அவன் உயிருடன் இருக்கமாட்டான். அதை நாங்கள் செய்வோம். இவ்வாறு சீமான் கூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications