பெரியார் மீதான சந்தானம் விமர்சனம்- திராவிட ஹைனாக்கள் ஏன் ஒப்பாரியாம்? கேட்பது சீமான் கட்சி கொ.ப.செ!
சென்னை: தந்தை பெரியார் மீதான நடிகர் சந்தானத்தின் விமர்சனத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன். இது சந்தானம் விவகாரத்தில் புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
நடிகர் சந்தானம் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் இடம் பெறக் கூடிய "யப்பா சாமீ இல்லைன்னு ஊருக்குள் சுத்திகிட்டு திரிஞ்சியே அந்த ராமசாமிதானே நீ?" என்கிற வசனம் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. தந்தை பெரியாரை விமர்சனம் செய்யும் வகையில் சந்தானம் படத்தின் வசனம் இருப்பதாக சமூக வலைதளங்களில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. இதனால் சந்தானம், தமது எக்ஸ் பக்க பதிவுகளையே நீக்கி இருந்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி, சந்தானம் ஒரு சாதிய வன்மம் பிடித்த சங்கி; அதனால் திட்டமிட்டே தந்தை பெரியாரை விமர்சனம் செய்திருக்கிறார் என சாடியிருந்தார். மேலும் தமிழ்நாடு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்தானத்தை ஒரு தீய சக்தி என விமர்சித்திருந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் சந்தானத்துக்கு எதிராக பெரும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக சீமானின் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இது தொடர்பாக சாட்டை துரைமுருகன் தமது எக்ஸ் பக்கத்தில், "சந்தானம் சரியாத்தானே சொல்றார் ! திராவிட ஹைனாக்கள் ஏன் கதறி ஒப்பாரி வைக்கிறார்கள் ? என பதிவிட்டுள்ளார். அத்துடன் சந்தானம் தமது எக்ஸ் பக்கத்தில் நீக்கிய வீடியோவையும் சாட்டை துரைமுருகன் மீண்டும் பகிர்ந்துள்ளார். தற்போது சாட்டை துரைமுருகனின் இந்த பதிவுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரையில் தந்தை பெரியார் குறித்து மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்து வருகிறது. தந்தை பெரியாரை மிக கடுமையாக சீமான் உள்ளிட்டோர் விமர்சிக்கவும் செய்கின்றனர்; தந்தை பெரியாரின் பிறந்த நாள், நினைவு நாளில் போற்றுகிற சமூக வலைதளப் பதிவுகளையும் வெளியிடுகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் சீமான், தந்தை பெரியாரை புகழ்ந்து பதிவிட்டதற்கு அவரது கட்சியினரே கடுமையாக எதிர்ப்பும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications