"தமிழகத்தில் தண்ணீர் விற்க தடை".. நாம் தமிழர் தேர்தல் அறிக்கையில் அதிரடி.. முக்கிய 10 அறிவிப்புகள்
சென்னை: நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில், தண்ணீர் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்றும், தண்ணீரை உறிஞ்சி கொள்ளையடிக்கும் நிறுவனங்கள் தடை செய்யப்படும், ஊழல் மற்றும் கையூட்டு பெற்று சிக்கும் அரசு அலுவலர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதோடு அவர்களின் வாரிசுகளுக்கும் அரசு வேலைகள் கொடுக்கப்படாது
என்பது உள்பட டாப் 10 அறிவிப்புகளை இங்கு பார்க்கலாம்.
வரும் சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களமிறங்குகிறது. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். 117 ஆண்கள், 117 பெண்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இன்று நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மொத்தம் 49 தலைப்புகளில் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டு இருந்தன. அதில் தண்ணீர் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
குடிநீர் விற்பனைக்கு தடை
* குடிநீர் என்பது விற்பனைக்கு அல்ல. நீர் என்பது உலக உயிர்களின் உயிர் தேவை. அது சந்தைப் பண்டமல்ல. விற்பனை பொருளும் அல்ல. நீரை விற்றால் நிறைய பணம் கிடைக்கும் என மனிதன் சிந்திக்கிறான். அதுதான் கொடிய சிந்தனை. காசு கொடுத்து கடையில் தண்ணீர் பெற்று குடிக்கின்றான். அதனால் தான் தண்ணீர் விற்பனை தடை என்கிறோம்.
* நீரை உறிஞ்சி கொள்ளையடிக்கும் தனியார் நிறுவனங்கள் தடை செய்யபப்டும். அவர்களுடனான ஒப்பந்தஙகள் திரும்ப பெறப்படும். தனியார் குடிநீர் விற்பனைகள் தடை செய்யப்படும்.
*ஆழ்துளை குழாய்களின் மூலம் நீர் எடுப்பது ஒழிக்கப்படும். நீர் அதிகமாக தேவைப்படும் இடங்களில் புதிய நீர்வரத்து தாரைகள் உருவாக்கப்படும்.
தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாடு
* ஏரி, குளங்கள், ஆறுகள் நீர்நிலைகள்ஆகியவற்றில் கலக்கும் கழிவுநீர் முற்றிலுமாக தடுக்கப்படும். ஆற்றங்கரையோரம் எந்தவித தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கப்படாது. ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகள் தூய்மைப்படுத்தும் மையத்தை சரியான முறையில் செயல்படுத்தவில்லை என்றால் அவர்களின் உரிமம் திரும்ப பெறப்படம். கழிவகளை ஆற்றில் கலக்கவிடும் தொழிற்சாலைகளின் உரிமமும் உடனடியாக திரும்ப பெறப்படும்.
* ஏரி, கண்மாய், குளங்கள் போன்ற நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு அதன் கரைகள் வலுப்படுத்தப்படும். மேலும் கரைகளில் பனைமரம், வேம்பு, புங்கை, பனிக்கொன்றை, மருதரமரம், நாவல் மரங்கள் வைக்கப்படும்.
அரசு பணி சார்ந்த அறிவிப்புகள்
* அனைத்து அரசு அலுவலகங்களிலும் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு வெளிப்படைய நிர்வாகம் உறுதி செய்யப்படும். அமைச்சர்கள் அலுவலகம் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை இது பொருந்தும்
* கையூட்டு ஊழல் ஒழிப்பு ஆணையம் அமைக்கப்படும். மாநில அளவில் தலைமை ஆணையரும், மாவட்ட தலைநகரங்களில் துணை ஆணையரும் பணியமர்த்தப்படுவார்கள். இவர்களின் கீழ் ஒரு கட்டமைப்பு தனித்த அதிகாரத்தோடு இயங்கும். ஊழல் செய்பவர்களை, கையூட்டு பெறுபவர்களை அடையாளம் கண்டு அவர்கள் அத்துறையில் இருந்து ஒரு படி தகுதி குறைப்பது, வேறு துறைக்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்க இந்த ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கப்படும்.
நேரடி பணி நீக்கம்
* கையூட்டு, ஊழல் குற்றத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தாருக்கு அரசின் சலுகைகள், அரசு வேலைகள் எதுவும் கொடுக்கப்படமாட்டாது. அரசின் சலுகைகள் அனைத்தும் திரும்ப பெறப்படும்.
* ஊழல், கையூட்டில் ஈடுபடுபவர்களுக்கு இடைக்கால பணி நீக்கம் கிடையாது. உடனடியாக விசாரணை நடத்தி உறுதி செய்ப்பட்டா நிலையான பணி நீக்கம் செய்யப்படுவர்.
* ஊழலை தடுக்கும் வகையில் 'சேவை உரிமை சட்டம் ' (Right to Services) உடனடியாக இயற்றப்படும். ஊழல் தடுப்பு உசாவும் (விசாரணை) அமைப்புகளுக்கு முழுமையான தன்னாட்சி அளிக்கப்படும். ஊழல் குற்றசசாட்டுகள், நெறிமீறல்கள் குறித்து முறையீடு அளிப்படவரின் பெயர் வெளியே தெரியாதவாறு காப்பதற்கான சட்டம் இயற்றப்படும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications