தோற்றாலும் துவளாமல்.. வளர் பிறை போல் தேர்தலுக்கு தேர்தல் வளரும் நாம் தமிழர் கட்சி.. வெற்றி கிட்டுமா?
சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி நல்லதொரு வாக்கு சதவீதத்தை பெறும் என்றே தெரிகிறது. கணிசமான தொகுதிகளில் வென்று சட்டசபைக்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அனைவருடைய கவனத்தையும் எதிர்பார்ப்பையும் நாம் தமிழர் கட்சி ஈர்த்துள்ளது.
தமிழகத்தை தமிழனே ஆள வேண்டும். விவசாயம், இயற்கையைப் பாதுகாத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சீமான் , நாம் தமிழர் கட்சியை முன்னெடுத்து செல்கிறார்.

சந்தேகம்
கடந்த 2009 ஆம் ஆண்டே நாம் தமிழர் கட்சி தொடங்கிய போதிலும் 2016ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வருகிறது. அந்த தேர்தலில் இக்கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 4,58,104 ஆகும். இதன் சதவீதம் 1.04 சதவீதம் ஆகும். இந்த 4 லட்சம் வாக்குகள் ஒருவர் வெற்றி தோல்வியை நிச்சயம் தீர்மானிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

4 ஆவது இடம் நாம் தமிழருக்கு
இதையடுத்து 2017ஆம் ஆண்டு ஆர் கே நகர் இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி வளர்பிறை போல் வளர்ந்து வருகிறது. இந்த தேர்தலில் பாஜகவை பின்னுக்கு தள்ளிவிட்டு நாம் தமிழர் கட்சி 3,802 வாக்குகளுடன் 4ஆவது இடத்தை பிடித்தது. அதாவது முதலிடம் தினகரனுக்கு, இரண்டாவது அதிமுக, 3ஆவது தேமுதிக, 4 ஆவது இடம் கிடைத்தது.

வாக்கு சதவீதம்
தோல்வி வந்தால் துவண்டு போகக் கூடாது என்பதில் சீமான் உறுதியாக இருக்கிறார். கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டு 39 தொகுதிகளிலும் சேர்த்து 16,45,185 வாக்குகளை பெற்றது. இதன் வாக்கு சதவீதம் 3.9 ஆகும். இந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

2021 ஆம் ஆண்டு கள நிலவரம்
இத்தனைக்கும் தேர்தலில் காசு கூட நாம் தமிழர் கட்சி கொடுப்பதில்லை என்ற போதிலும் அதன் வாக்குகள் அதிகமாகி வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு களநிலவரம் வேறு, 2021 ஆம் ஆண்டு களநிலவரம் வேறு. எனவே வரும் சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிச்சயம் அதிக அளவில் வாக்குகளை பெற்று கணிசமான இடங்களில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை என்றே கள நிலவரங்களும் அரசியல் பார்வையாளர்களும் சொல்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம். நாம் தமிழர் கட்சியின் வெற்றியை!
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications