எனக்கு வாய்கொழுப்பு.. ஜெயக்குமாருக்கு பணக்கொழுப்பு.. விட்டுவிளாசிய சீமான்!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சீமான் கூறுகையில், எல்லா பகுதிகளிலும் படையை உருவாக்கி தான் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள். ஆனால் மக்கள் படையாக மாற்றி ஆங்கிலேயர்களை எதிர்த்தவர் தீரன் சின்னமலை என்று புகழ்ந்தார்.
தொடர்ந்து பேசிய சீமானுக்கு வாய்க்கொழுப்பு அதிகம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சீமான், எனக்கு வாய்க்கொழுப்பு, ஜெயக்குமாருக்கு பணக் கொழுப்பு. ஜெயக்குமார் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அதை கெடுத்துக் கொள்ளக் கூடாது.
பாஜகவையோ, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையோ பேசினால், உடனே வீட்டிற்கு சோதனை செய்ய வருவார்கள் என்று பயம். ஆனால், என்னிடம் இழப்பதற்கு எதுவும் கிடையாது. நான் அவரை அண்ணன் என மதிக்கிறேன். அதனால் ஜெயக்குமார் என்னை அப்படி பேசுகிறார். அதிமுக, பாஜக, திமுக, காங்கிரஸ் என்ற கட்சிக்காவது தனித்துப் போட்டியிட தைரியம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து திராவிடம் என்றால் என்ன என்று விளக்கமளிக்க முடியாத ஒரு கொள்கையை பின்பற்றி வருகிறார்கள். வரலாற்றில் ஆண்ட அனைத்து பேரரசுகளும் ஒரு நாளில் வீழ்த்துள்ளன. இன்னும் எத்தனை நாட்களுக்கு ஆட்சி செய்வீர்கள் என்பதை பார்க்கிறேன்.
பாஜக 5ஜி அலைக்கற்றையில் மட்டுமல்ல. கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து முறைகேட்டில் தான் ஈடுபட்டு வருகிறது. நாட்டை 4 பேர் ஆள்கிறார்கள். அதில் இருவர் விற்கிறார்கள், இருவர் வாங்குகிறார்கள். அவர்கள் நான்கு பேருமே குஜராத்திகள் தான். மோடி டீ விற்றார் என்று சொல்வதை நம்பும் மக்கள், மோடி நாட்டை விற்கிறார் என்று சொல்வதை நம்புவதில்லை.
பாஜக சார்பாக பேசும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல், டீசலுக்கான விலையை இருமுறை குறைந்துள்ளோம் என்று கூறுகிறார்கள். உயர்த்தியவர்கள் தானே குறைக்க வேண்டும். 5 மாநில தேர்தல் வரவில்லை என்றால் பெட்ரோல் விலையை குறைத்து இருக்க மாட்டார்கள் என்று விமர்சித்தார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications