பாஜக அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குகளை ‘ஏவுவதா? சீமான் வலதுகரம் சாட்டை துரைமுருகன் கடும் கண்டனம்!
சென்னை: பாஜகவின் மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது அடுத்தடுத்து வழக்குகள் போட்டு அவரை கைது செய்வதற்கு நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி சாட்டை துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த பனையூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு முன்பாக அனுமதி இல்லாமல் நிறுவப்பட்ட கொடிக் கம்பம் அகற்றப்பட்டது. ஆனால் இதனை அதிகாரிகள் அகற்ற கூடாது என பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகள் கொண்டு வந்த ஜேசிபி இயந்திரம் தாக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அமர் பிரசாத் ரெட்டி முதலில் கைது செய்யப்பட்டார்.

அடுத்தடுத்த வழகுகள்- குண்டாஸ் பாய்கிறது?: நீதிமன்றங்களுக்கு தொடர் விடுமுறை என்பதால் அமர் பிரசாத் ரெட்டிக்கு உடனே ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் மீது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழ்நாடு அரசின் விளம்பரங்களை சேதப்படுத்தி பிரதமர் மோடி படத்தை ஒட்டியது, சென்னை நுங்கம்பாக்கத்தில் போலீசாருடன் மோதியது உள்ளிட்ட பழைய வழக்குகள் பாய்ந்தன. இந்த வழக்குகளிலும் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார். தற்போது 4-வதாக தென்காசி வழக்கு ஒன்றிலும் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது. அடுத்தடுத்த வழக்குகள் பாய்வதால் அமர் பிரசாத் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவும் சாத்தியம் இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாட்டை துரைமுருகன் கண்டனம்: பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி மீதான இந்த தொடர் நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி சாட்டை துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சாட்டை துரைமுருகன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை ! ஒரு வழக்கில் கைது செய்துவிட்டு தொடர் வழக்குகளை வைத்து குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்த முயல்வது வன்மையாக கண்டிக்கதக்கது. திமுகவை எதிர்த்து அரசியல் பேசினால் குண்டர் சட்டத்தில் அடைப்பீர்கள் என்றால் உங்கள் ஆட்சி முடிந்த பிறகு இது உங்களுக்கே திரும்ப நடக்கும். அமர் பிரசாத் ரெட்டியின் கோட்பாட்டில் முரண் இருந்தாலும் அவருக்கு தொடர் வழக்குகள் வைப்பது கண்டிக்க வேண்டியது. கருத்து சுதந்திரம் பேச திமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை. இவ்வாறு சாட்டை துரைமுருகன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications