வெல்கம் ரஜினி சார்.. வி ஆர் வெயிட்டிங்..எங்களுக்கே ஆதாயம்.. சொடக்கு போட்டு சவால் விடும் நாம் தமிழர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை ஜனவரியில் தொடங்குவதாக அறிவித்திருப்பது "நாம் தமிழர் கட்சிக்குதான் ஆதாயமாக அமையப் போகிறது..என பட்டியல் போட்டு சமூக வலைதளங்களில் குதூகலிக்கின்றனர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டுள்ள தமிழகத்தில் பரபரப்பையும் விவாதங்களையும் கிளப்பி உள்ளது. ரஜினிகாந்தின் வருகையால் பாதிக்கப்படப் போவது எந்த கூட்டணி? என்கிற விவாதங்கள் களைகட்டி இருக்கின்றன.

இன்னொரு பக்கம் ரஜினிகாந்த் ஆதரவு தரப்பு #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல, #Rajinikanth என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் டிரண்டாக்கியுள்ளது. இதற்கு உடனடி பதிலடியாக #தமிழர்_நாட்டை_தமிழர்_ஆள்வோம் என்ற முழக்கத்தை நாம் தமிழர் கட்சி டிரெண்டிங்காக்கி இருக்கிறது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை செயலாளர் மணிசெந்தில், தமது சமூக வலைதளப் பக்கங்களில், "ரஜினியின் அரசியல் பிரவேசம் நாம் தமிழர் கட்சிக்கு எப்படி ஆதாயமாக அமையப் போகிறது..?? வெல்கம் ரஜினி சார். வி ஆர் வெயிட்டிங் " என்ற தலைப்பில் போட்ட பதிவு வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

வாக்குகளில் பாதிப்பு இல்லை

வாக்குகளில் பாதிப்பு இல்லை

ரஜினி அரசியலுக்கு வருவது போன்ற ஒரு மக்ழ்ச்சியான செய்தி போல நாம் தமிழருக்கு வேறு எதுவும் இல்லை. நாம் தமிழர் கட்சி அடையப் போகும் ஆதாயங்கள். நாம் தமிழர் கட்சிக்கான ஆதரவு வாக்குகள் ரஜினி வருகையால் எந்த ஒரு பாதிப்பையும் சந்திக்காது. ஏனெனில் ரஜினியை ஆதரிக்கும் மனநிலை கொண்டவர்கள் எப்போதும் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிரானவர்களே.

பிரசாரத்துக்கு வலு

பிரசாரத்துக்கு வலு

ரஜினியின் அரசியல் பிரவேசம் நாம் தமிழர் கட்சியின் பிரசாரத்துக்கு மிகுந்த வலுவையும், கவர்ச்சியையும் ஏற்படுத்தும். மண்ணின் மைந்தர்களுக்கான உரிமை முழக்கம் விண்ணைப் பிளக்கும்.

அரசியல் புரிதல் இல்லாத ரஜினி

அரசியல் புரிதல் இல்லாத ரஜினி

மிகு உணர்ச்சி கொண்ட இந்துத்துவா அரசியல் பேச இருக்கிற, பெரிதாக அரசியல் புரிதல் இல்லாத ரஜினி.. நமக்கு, நமது பிரசாரத்துக்கு நிறைய content தருகிற எந்திரமாக மாறிப் போவார். 2016 விஜயகாந்த் போல நாம் எதிர்த்துப் பேச பல விஷயங்களை ரஜினி வாரி வழங்குவார். நாம் தமிழர் கட்சியின் இளம் பேச்சாளர்களுக்கு இந்த தேர்தல் ஒரு மிகப் பெரிய கொண்டாட்டம்தான்.

நடிகர்கள் கனவு உடையும்

நடிகர்கள் கனவு உடையும்

ரஜினி போன்ற மாயை ஒரு தேர்தலோடு உடைவது நாம் தமிழர் கட்சியின் எதிர்காலத்துக்கு மிகச் சிறந்தது. வெறும் சினிமா மாயையை மட்டும் வைத்துக் கொண்டு அரசியல் பாதையை செய்ய முடியாது என்கின்ற நடிகராக ரஜினி திகழ்வார். வெறும் சினிமா கவர்ச்சியை வைத்துக் கொண்டு அரசியலுக்கு வந்துவிடலாம் என்று நினைக்கிற நடிகர்களின் கனவு கோட்டையை ரஜினியின் மகத்தான தோல்வி சுக்கு நூறாக உடைத்து போடும்.

தமிழ்த் தேசிய அரசியல்

தமிழ்த் தேசிய அரசியல்

தமிழ்த் தேசிய அரசியல் இன்னும் கூர்மையடையும். ரஜினி போன்றவர்களின் அரசியல் வருகையால் நாம் தமிழர் கட்சியின் தேவை தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் அதிகரிக்கும். வாருங்கள் ரஜினிசார்.. வி. ஆர். வெயிட்டிங். இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+