நாம் தமிழருக்கு இதைவிட குட் நியூஸ் இருக்காதே.. அதிமுகவை முந்தி 2ம் இடம்! யார் சொல்றதுன்னு பாருங்க
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக மீண்டும் ஒன்று சேர வேண்டும். அதிமுக அப்படி ஒன்று சேரவில்லை என்றால் கண்டிப்பாக அந்த கட்சி காணாமல் போகும். தென் தமிழ்நாட்டிலேயே பாஜகவை விட அதிமுக மோசமான நிலையை அடைந்துள்ளது. அதிமுக தெற்கில் 3ம் இடத்திற்கு சென்றுள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. தற்போது 10வது தேர்தலிலும் தோல்வி அடைந்து உள்ளது.

அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. தற்போது 10வது தேர்தலிலும் தோல்வி அடைந்து உள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக தொடர்ந்து தோல்வி அடைவதால், மிகப்பெரிய அரசியல் மாற்றம் வரலாம் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அது பற்றி பேட்டி அளித்துள்ளார்.
பேட்டி: அதில், தமிழ்நாட்டில் என்னதான் தண்ணீர் குடிச்சாலும் தேசிய கட்சிகள் மாநிலத்தில் வலிமை பெற முடியாது. பாஜக வலிமை பெற முடியாது. அதிமுகவும் இந்த சட்டசபை தேர்தலில் முன்னேற முடியாது. அவர்களுக்கு உட்கட்சி மோதல் உச்சத்தில் உள்ளது. கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டுவிட்டு 1% வாக்கு கூடிவிட்டது என்கிறார்கள். கடந்த முறையை விட 10 இடங்கள் கூடுதலாக போட்டியிட்டு உள்ளனர். அப்படி இருக்க அதிமுக எப்படி முன்னேற முடியும்.
தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். கண்டிப்பாக மாநில கட்சிகள்தான் தமிழ்நாட்டில் இருப்பார்கள். நாம் தமிழர் வளரலாம்: தமிழ்நாட்டில் இதனால் நாம் தமிழர் வளரலாம். அவருடன் விஜய் சேர்ந்தால் கண்டிப்பாக நல்ல வலிமை பெறும். அப்போதும் கூட சட்டசபையில் பாஜக மூன்றாம் இடத்திற்கே செல்லும். தேசிய கட்சியாக இருந்தால் அதுதான் நிலைமை.
தமிழ்நாட்டில் அதிமுக மீண்டும் ஒன்று சேர வேண்டும். அதிமுக அப்படி ஒன்று சேரவில்லை என்றால் கண்டிப்பாக அந்த கட்சி காணாமல் போகும். தென் தமிழ்நாட்டிலேயே பாஜகவை விட அதிமுக மோசமான நிலையை அடைந்துள்ளது. அதிமுக தெற்கில் 3ம் இடத்திற்கு சென்றுள்ளது. மாநில கட்சிக்குத்தான் மக்கள் அதிக இடம் கொடுப்பார்கள். இதனால் சட்டசபை தேர்தலில் பாஜக அந்த இடத்தை பிடிக்காது. சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் இதனால் நாம் தமிழர் வளரலாம்.
2026ல் அதிமுகவை புறக்கணித்துவிட்டு நாம் தமிழர் அந்த இடத்தை பிடிக்கலாம். ஏன் விஜய் கூட வரலாம்.எடப்பாடி ஜெயலலிதா கிடையாது. ஜெயலலிதாவிற்கு தமிழ்நாடு முழுக்க செல்வாக்கு இருந்தது. தமிழ்நாடு முழுக்க அவர் வலிமையாக இருந்தார். அவர் தோல்வி அடைந்து இருக்கிறார். மீண்டும் எழுந்து வந்து இருக்கிறார்.
அவருக்கு தமிழ்நாடு முழுக்க பரந்துபட்ட ஆதரவு இருந்தது. ஆனால் ஜெயலலிதா அப்படி செய்ததை எடப்பாடி செய்யவில்லை. எடப்பாடி அப்படி எதையும் செய்யாமல் எப்படி அதிமுகவை வளர்க்க நினைக்கிறார், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications