தோற்றாலும் ஆட்டநாயகனாகும் நாம் தமிழர்.. அடுத்த தேர்தலுக்கு அஸ்திவாரம் போட்ட சீமான்.. செம வியூகம்!
சென்னை: திருவொற்றியூர் சட்டசபைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பின்னடைவை சந்தித்து வந்தாலும் இந்த தேர்தல் களத்தின் ஆட்டநாயகனாக அக்கட்சி இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
சீமானின் நாம் தமிழர் கட்சி எந்த தேர்தலாக இருந்தாலும் அதில் புதுமையை புகுத்தி வருகிறது. வேட்பாளர்கள் தேர்விலும் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்குகிறது.
எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றது.

5.58 சதவீதம்
கடந்த 2016ஆம் ஆண்டு வெறும் 1.5 சதவீதமாக இருந்த இதன் வாக்குச் சதவீதம் அடுத்த 3 ஆண்டுகளில் அதாவது 5.58 சதவீதமாக உயர்ந்து வருகிறது. 4 நாடாளுமன்றத் தொகுதிகளில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை விட அதிக எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்றது.

117 தொகுதிகள்
இந்த முறையும் 234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் ஆண்கள், 117 தொகுதிகளில் பெண்கள் என களம் கண்டது நாம் தமிழர் கட்சி. தற்போது வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

திருவொற்றியூர்
இதில் சீமான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் குப்பனை விட வாக்குகள் குறைவாக பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். அவரது கட்சியின் மற்ற வேட்பாளர்கள் யாரும் கணிசமான வாக்குகளை பெறவில்லை.

ஆட்டநாயகனாகும்
இந்த தேர்தலில் அதிமுக, திமுகவின் வாக்குகளை நாம் தமிழக் கட்சி பிரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இக்கட்சி ஒரு தொகுதியிலும் ஜெயிக்காவிட்டாலும் அதிக வாக்குகளையும் வாக்கு சதவீதத்தையும் பெற்று தேர்தல் எனும் ஆடுகளத்தில் ஆட்டநாயகனாக நாம் தமிழர் உருவெடுக்கும். இந்த வளர்ச்சி அடுத்த தேர்தலுக்கு இக்கட்சிக்கு உதவும் என்பதில் துளிக் கூட சந்தேகம் இல்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications