ராஜீவ் வழக்கில் விசாரிக்கப்பட்டவர்.. தமிழ் தேசிய போராளி..அவர் தான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
Recommended Video

சென்னை:திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சாகுல் ஹமீது 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் தேசியப் போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறை சென்றிருக்கிறார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி காலமானதை அடுத்து, திருவாரூர் தொகுதி காலியானது. தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், திருவாரூர் தொகுதிக்கும் மட்டும் வரும் 28ம் தேதி அதிரடியாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வாக்கு எண்ணிக்கை 31ம் தேதி நடைபெற்று, வெற்றி பெற்றவர் யார் என்று தெரிவிக்கப்படும்.
இடைத்தேர்தலில் களமிறங்க பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றன.வேட்பாளர் தேர்வு, ஆலோசனை கூட்டம் என அதிமுக, திமுக, அமமுக என முக்கிய கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.
டிடிவி தினகரனின் அமமுக கட்சி சார்பில் வேட்பாளராக காமராஜ் அறிவிக்கப் பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது வேட்பாளராக களமிறங்கி உள்ளார். 25 ஆண்டுகளுக்கும மேலாக தமிழ்த் தேசியப் போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறை சென்றிருக்கிறார் என்று அக்கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழர் போராட்டம்
25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் தேசியப் போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்ற வரலாறு இருக்கிறது. சாகுல் அமீது ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் இருந்த அந்தனப்பேட்டை எனும் சிற்றூரில் பிறந்தவர்.

வணிக நிறுவனம் நடத்தியவர்
1974 - 82 காலக்கட்டத்தில் திருவாரூரில் வணிக நிறுவனம் நடத்தி அங்கேயே வளர்ந்தவர். தமிழினம் சார்ந்து வெளிவந்த மிகசொற்ப இதழ்களில் ஒன்றான ‘தமிழ் முழக்கம் வெல்லும்' இதழை நடத்தியவர் சாகுல் அமீது. 2002ம் ஆண்டு, தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் உலகச் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.

பிரபாகரன் பற்றாளர்
ஈழத்தின் மீதும் பிரபாகரன் மீதும் அளவு கடந்த பற்றுக்கொண்ட சாகுல் அமீது, தலைவரின் அந்த நேர்காணலைத் திறனாய்வு செய்வதற்காக, சென்னை ஆனந்தா திரையரங்கில் ஒரு திறனாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக, பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டு 17 மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர், பழ.நெடுமாறன் எழுதிய, தமிழீழம் சிவக்கிறது எனும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தனது வணிகக் கிடங்கில் வைத்திருந்ததால், தேசத் துரோக வழக்குத் தொடுக்கப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டார் சாகுல் அமீது.

அனைவருக்கும் அறிமுகம்
தமிழகத்தில் இருக்கிற அனைத்துக் கட்சி மற்றும் இயக்கத் தலைவர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு விசாரிக்கப்பட்ட மிக முக்கியத் தமிழ்த்தேசியவாதிகளில் சாகுல் அமீதும் ஒருவர்.

புயல் சீரமைப்பு பணிகள்
அண்மையில் கஜா புயலில் சிக்குண்டு பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் கஜா புயல் துயர் துடைப்புப் பணிகளில் முன்னின்ற களப்பாணியாளர்களில் சாகுல் அமீதும் ஒருவர் என்று நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications