வான்டடாக' வண்டியிலேறிய வீரலட்சுமி.. கோர்ட்டுக்கு இழுப்போம்- 'சீமான்' 'தம்பி' சாட்டை துரைமுருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பாலியல் குற்றவாளி என விமர்சித்த தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அக்கட்சியின் பிரமுகர் சாட்டை துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக சாட்டை துரைமுருகன் கூறியதாவது: வீரலட்சுமி பெரிய ரவுடி என்பது தெரியாது. அவங்க தாத்தா பெரிய ஆட்கள். அவங்க மாமனார் சவுகார்பேட்டையில் பெரிய ஆள். தாத்தா ஏதோ ஒரு நாயக்கராம். அவங்க வன்னியராம். அவங்க மாமனார் முதலியாராம். லெமன் மிக்சிங் சோடா மாதிரி தாத்தா நாயக்கர், மாமனார் முதலியார், இந்தம்மா வன்னியர்.

Naam Tamilar Sattai Durai Murugan to file defamation case against Veeralakshmi

வடமாவட்டத்தில் நாம் தமிழர் ஒரு சீட்டு சீமான் அடிக்க முடியாது. இது என்ன என்று எங்களுக்கும் புரியவில்லை. சீமான் அண்ணன் குடியிருப்பதே வடமாவட்டம்தான். வட மாவட்டத்தில்தான் நாம் தமிழர் கட்சி கோட்டையாக கட்டி எழுந்து கொண்டிருக்கிறது. வடமாவட்டங்களில் அக்டோபர் மாதம் 10,15 கூட்டங்களை நாம் தமிழர் கட்சி நடத்த உள்ளது. நானும் வருவேன். நாம் தமிழர் கட்சி பேச்சாளர்களும் வருவார்கள். முடிந்தால் காலில் இருக்கிற கட்டை விரல்... பிடுங்க வாங்க.

விஜயலட்சுமி புகாரை வாபஸ் வாங்கிவிட்டு அவர் போய்விட்டார். இதில் வீரலட்சுமிக்கு என்ன வேலை? ரூ5 கோடியை சீமானிடம் இருந்து வாங்கி தருவதாக விஜயலட்சுமியை வரவழைத்து அவருக்கு சாப்பாடு கூட போடாமல் ஒரு இருட்டு பங்களாவில் அடைச்சு, அக்காவும் தங்கையும் சித்ரவதை செய்து 40,50 நாய்களை வைத்து யாரும் சந்திக்க முடியாத அளவுக்கு கொடுமைப்படுத்தினார் வீரலட்சுமி என்கிறார் விஜயலட்சுமி வழக்கறிஞர். கோவில்பட்டி வீரலட்சுமின்னு பார்த்தா வியாசர்பாடி வீரலட்சுமியா என கூறியிருக்கிறார். வீரலட்சுமியின் வேலையே இதுதான்.

சீமானை பாலியல் குற்றவாளி என வீரலட்சுமி கூறியிருக்கிறார். பாலியல் குற்றம்சாட்டப்பட்டவர் என்றுதானே சொல்ல வேண்டும்? எந்த நீதிமன்றத்தில் சீமான் பாலியல் குற்றவாளி என தீர்ப்பாகி இருக்கிறது. இதற்காக நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை வீரலட்சுமி மீது மான நட்ட வழக்கு போடும். ரூ1 கோடி நட்ட ஈடு கேட்கும். தனிப்பட்ட முறையில் நானும் சீமானை பாலியல் குற்றவாளி என விமர்சித்ததற்காக வீரலட்சுமியை நீதிமன்றக் கூண்டில் ஏற்றியே தீருவேன். இவ்வாறு சாட்டை துரைமுருகன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+