Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது மாபெரும் குற்றமா? யூ டியூபர் துரைமுருகன் கைது காழ்புணர்ச்சியானது.. நாம் தமிழர் சீமான் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: யூ டியூபர் துரைமுருகன் உட்பட 4 பேர் இன்று திருச்சியில் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Saattai Duraimurugan-ன் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள் | Oneindia Tamil

    திருச்சியில் கார் நிறுவன ஊழியரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் யூ டியூப் பதிவர் துரைமுருகன் உட்பட 4 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலை புலிகள் பிரபாகரன் குறித்து திருச்சியை வினோத் என்பவர் செய்த டிவிட் காரணமாக இன்று திருச்சியில் அவர் பணியாற்றும் கார் நிறுவனத்தில் மிரட்டப்பட்டார்.

    யூ டியூப் பதிவர் துரைமுருகன் மற்றும் சிலர் கூட்டாக சென்று வினோத்தை மன்னிப்பு கேட்கும்படி மிரட்டி உள்ளனர். இதையடுத்து போலீசில் வினோத் அளித்த புகாரை தொடர்ந்து யூ டியூப் பதிவர் துரைமுருகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கண்டனம்

    கண்டனம்

    இந்த நிலையில் நால்வர் கைதுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசியத்தலைவர் குறித்து சமூகவலைதளத்தில் இழிவாக பதிவிட்டவரை, காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிடச்செய்த நால்வரை கைது செய்துள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு! தம்பிகள் நால்வரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    தலைவர்

    தலைவர்


    தமிழ்த்தேசிய இனத்தின் ஒப்பற்ற எம் தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களைப் பற்றி மிகவும் இழிவாகப் பதிவுகள் இட்ட திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவரை நேரடியாகச் சந்தித்து, புரிதல் ஏற்படுத்தி காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிட வைத்த ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் சந்தோஷ் என்ற மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் ஆகியோரை காவல்துறை திடீரென கைது செய்துள்ளனர்.

    கண்டனம்

    கண்டனம்

    இவர்களை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மாற்றுக்கருத்து கொண்டவருக்குப் புரிதல் ஏற்படும் வண்ணம் நேரடியாகச் சென்று விளக்கமளித்து அவருக்குப் புரிதலை ஏற்படுத்திக் காவல்துறை முன்னிலையில் எவ்விதமான வற்புறுத்தலும் இல்லாமல் புரிதலின் அடிப்படையில் மறுப்பு காணொளி வெளியிட செய்வதென்பது கருத்துரிமை சார்ந்த செயல்பாடு.

    குற்றம்

    குற்றம்

    இதை மாபெரும் குற்றம் எனக்கருதி, தம்பிகளை கைது செய்திருப்பது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல். சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ள தம்பிகள் சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ் என்ற மகிழன், சரவணன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்துகிறேன்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+