1,728 ஓட்டில் கமல்ஹாசனை ஜெயித்த வானதி.. 20,000 வாக்கு வித்தியாசத்தில் வென்றதாக அடித்து சொன்ன சீமான்!

கோவை தெற்கு தொகுதியில் 20,000 வாக்குகளில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஜெயித்தார் என சீமான் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை தெற்கு தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசம் மொத்தம் 20,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்; அந்த 20,000 வாக்குகளுமே வட இந்தியர்கள் போட்ட வாக்குதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. வானதி சீனிவாசன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த நிலையில் சீமான் தவறான தகவலை பரப்புகிறார் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.

புதிய தலைமுறையின் அக்னி பரீட்சை டிவிக்கு சீமான் அளித்த பேட்டியில் வட இந்தியர் தொடர்பாக கூறியதாவது: நீ நீயாக இரு.. உன் கலாசாரம், பண்பாட்டுடன் இரு. நான் நானாக இருக்கிறேன். எல்லோரும் மொழிவழி மாநிலம் பிரிந்து போய்விட்டீர்கள். எனக்கு இந்த ஒரு நிலம்தான் இருக்கு. இந்த நிலத்தின் அதிகாரத்தை எனக்கு கொடுத்துப் பார். நான் என் நிலத்தைப் பாதுகாப்பேன். தெருக்களில் தமிழ் இருக்கிறதா? என் மொழி செத்து போயிருச்சு.

Naam Tamilar Seemans controversial interview on North Indian votes

ஆந்திரா காட்டுக்குள் 20 பேரை சுட்டுக் கொன்றார்களே.. அப்போது நீங்கள் எனக்காக பாவம் என்று பேசினீர்களா? 20 மீனவரை ஒரே சங்கிலியில் இழுத்துக் கொண்டு போன போது யாரேனும் என் மீனவனுக்காக பேசினார்களா? செம்மரக் கட்டை வெட்ட வந்தவர்கள் என கூறி ஆந்திராவில் ஆயிரக்கணக்கில் சிறையில் இருக்கிறார்கள். செம்மரம் வெட்ட வந்த கூலி தமிழன் எனில் வெட்ட சொன்ன முதலாளி யார்? அவனை ஏன் கைது செய்யவில்லை இதனை யாரும் தட்டிக் கேட்டார்களா? இந்த அதிகாரம் கேட்கவில்லை.. நான் முதல்வராக இருந்தால் என் தமிழ் பிள்ளைகளை யாரேனும் தொட முடியுமா?

தமிழ்நாட்டில் ஒன்றரை கோடிப் பேர் வட மாநிலத்தவர் இருப்பது உண்மை. அவர்களில் 75 லட்சம் பேருக்கு வாக்குரிமை கிடைத்துவிட்டது. இப்ப அம்மா வானதி சீனிவாசன் கோவையில் வெல்றாங்க.. அந்த தொகுதியில் 20,000 வாக்கு வித்தியாசம். 20,000 வாக்கும் வட இந்திய வாக்கு. அவங்க பிஜேபி ஓட்டர்ஸ்.. அதனால் பேசமாட்டாங்க. காங்கிரஸ் வாக்கும் இல்லை. திராவிட கட்சிக்கும் இல்லை. சுத்தமாக எனக்கும் இல்லை. அவன் யாருக்கு போடுவான்?. இவ்வாறு சீமான் பேசினார்.

Naam Tamilar Seemans controversial interview on North Indian votes

வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக சீமான் சொல்வது உண்மைக்கு மாறானது என நெட்டிசன்கள் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர். 2021 சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு அனைவரும் கவனித்த நட்சத்திர தொகுதி. மேலும் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், பாஜக வானதி சீனிவாசன் இடையே கடும் போட்டி இருந்து வந்தது. மிக மிக சொற்ப வாக்குகள் வித்தியாசம்தான் இருவருக்கும் இடையே இருந்தது. இறுதியாக 1728 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வானதி சீனிவாசன் வென்றதாக அறிவிக்கப்பட்டது. வானதி சீனிவாசனுக்கு மொத்தம் 53,209; கமல்ஹாசனுக்கு மொத்தம் 51,481 வாக்குகள் கிடைத்தன. வானதி சீனிவாசனுக்கும் கமல்ஹாசனுக்குமான வாக்கு வித்தியாசம் 1728 என்பதை 20,000 என சீமான் கூறியுள்ளார். அப்படியானால் வானதி சீனிவாசனுக்கு கிடைத்த 53,209 வாக்குகளில் வட இந்தியர் ஓட்டு மட்டுமே 20,000 என தவறுதலாக குறிப்பிட்டுவிட்டாரோ? என்கிற கேள்வியையும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் எழுப்புகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+