'அண்ணன்' சீமான் பிறந்த நாள்- 'தம்பி' நடிகர் விஜய் போனில் வாழ்த்து! புது கூட்டணிக்கு 'அச்சாரம்'?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஜய், தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரப்பி வருகின்றனர்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை தொடக்கத்தில் மிக கடுமையாக எதிர்த்தவர் சீமான். அண்மையில் விஜய் மாணவர்களை சந்தித்து உரையாடிய போது சீமான் தெரிவித்த கருத்து: நடிகர் விஜய் அரசியலுக்கு வர விரும்புகிறார்.‌ படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதை நாம் வரவேற்கலாம், பாராட்டலாம். வாக்குச் செலுத்துவதற்கு பணம் கொடுக்கவும் வாங்கவும் கூடாது என்ற எனது கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் பேசியிருக்கிறார் விஜய் என்றார்.

Naam Tamilar to form New Alliance? Actor Vijay wishes Seeman on Birthday

விஜய்க்கு சீமான் எதிர்ப்பு: ஆனால் விஜய் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென நினைக்கிறார். எனவே விஜய் அரசியலுக்கு வருவதை வாழ்த்துவோம். என்னுடைய பாதை வேறு அவருடைய பாதை வேறு. திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்கு ஓர் இனத்தை வழிநடத்துவதற்குத் தலைவனாக இருப்பதற்கான தகுதியாகக் கூறுவது அவமானகரமானது. அதை எல்லோரும் சேர்ந்துதான் மாற்ற வேண்டும் எனவும் விமர்சித்திருந்தார் சீமான்.

விஜய்க்கு சீமான் ஆதரவு: ஆனால் லியோ பட விவகாரங்களில் நடிகர் விஜய்யை முழுமையாக சீமான் ஆதரித்து பேசுகிறார். இது தொடர்பாக சீமான் கூறுகையில், தம்பி விஜய் அடுத்த ஆண்டு முதல் படங்களில் நடிப்பதை நிறுத்தப் போகிறார். தம்பி விஜய் அரசியல் கட்சி தொடங்குவார். தம்பி விஜய் அரசியல் கட்சி தொடங்கட்டும். அப்போது கூட்டணி குறித்து பேசலாம். இப்போது நான் தனித்தே போட்டியிடுகிறேன் என கூறியிருந்தார்.

சீமானுக்கு விஜய் வாழ்த்து: இந்நிலையில் சீமானின் 57-வது பிறந்த நாள் இன்று உற்சாகமாகவும் வெகு விமரிசையாகவும் நாம் தமிழர் கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. இன்றைய பிறந்த நாளின் போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல நடிகர் விஜய்யும் சீமானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் என நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி பாக்கியராசன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே சீமான், விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்கக் கூடும் என்கிற ஆரூடங்கள் இருக்க.. விஜய் தற்போது சீமானுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததை கூட சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாற்றி வருகின்றனர் நாம் தமிழர் தம்பிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+