அணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வேண்டும் - மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை
நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்த அனுமதி தர வேண்டும் என்று மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: தமிழகத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக காவிரி ஆறு விளங்குகிறது. நமாமி கங்கை திட்டம் போல், காவிரிக்கும் சிறப்பு திட்டம் வகுக்க மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
அணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அணை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

நதிகள் இணைப்பது தொடர்பாக மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் இன்று காலை முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனை கூட்டத்தில், காவிரி கோதாவரி ஆறுகளை இணைப்பது குறித்து காணொளி மூலம் ஆலோசனை நடைபெற்றது.

அப்போது மத்திய அமைச்சரிடம் பேசிய முதல்வர், நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி அளிக்க கூடாது என்றும் அணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அணை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடனான ஆலோசனையில் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications