நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனம்.. அரசிற்கு எதிர்ப்பு.. வழக்கு தொடுக்க நடிகர்கள் முடிவு!
நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்த தமிழக அரசின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், கார்த்தி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்த தமிழக அரசின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், கார்த்தி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்து முடிந்து இன்னும் முடிவு வெளியாகவில்லை. தேர்தல் முடிவுகளை வெளியிட நீதிமன்றம் விதித்த தடை நீடிக்கும் நிலையில் சங்கத்திற்குள் சில பிரச்சனைகள் நடந்து வருகிறது. சில ஊழியர்களுக்கு பென்ஷன் பணம் கிடைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட நீதிமன்றம் விதித்த தடை நீடிக்கும் நிலையில், நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.பதிவுத்துறை உதவி ஐ.ஜி கீதாவை, நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு கூடாது
இந்த அறிவிப்பை தற்போது தென்னிந்திய நடிகர் சங்கம் எதிர்த்துள்ளது. இது தொடர்பாக நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், கார்த்தி ஆகியோர் அளித்த பேட்டியில், தென்னிந்திய நடிகர் சங்கம் தனி அமைப்பு. இதை அரசு கட்டுப்படுத்த நினைக்க கூடாது. 250 கோடி ரூபாய்க்கு மாளிகை போல கட்டிடம் கட்டி இருக்கிறோம். அதை ஆக்கிரமிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

புகார்
3222 பேர் மட்டுமே இருக்கும் சின்ன அமைப்புதான் நாங்கள்.இதில் 4 பேர் கொடுத்த புகாரில்தான் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது. நடிகர் ராதா ரவியின் சகோதரரும் புகார் அளித்துள்ளார். 4 பேர் கொடுத்த புகாரில், 3200 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் என்ன நியாயம் இருக்கிறது. இதுதான் அரசியலமைப்பா?

பென்ஷன் வரவில்லை
தங்களுக்கு பென்ஷன் வரவில்லை என்று அவர்கள் புகார் அளித்துள்ளனர். இதற்காக தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக தமிழ் அரசில் புகார் அளித்துள்ளனர். எங்களிடம் புகார் அளிக்கவே இல்லை. இதற்குத்தான் தமிழக அரசு தனி அதிகாரியை நியமித்துள்ளது.

தனி அதிகாரி நியமனம்
நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமித்ததை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எதிராக கண்டிப்பாக நீதிமன்றத்திற்கு செல்வோம். நீதிமன்றம் மூலம் இந்த பிரச்சனையை எதிர்கொள்வோம் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் பேட்டி அளித்துள்ளனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications