"ரூ.45 கொடுத்தால்தான் பார்க்க முடியுமா..? நந்திதா, தர்ஷா குப்தா வரிசையில் ஹரிப்பிரியாவும்... ரசிகர்கள் அதிருப்தி!"

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு காலத்தில் ரசிகர்களின் அன்பை பெறுவதற்காக சமூக வலைதளங்களில் இலவசமாக புகைப்படங்கள், வீடியோக்கள், லைவ், கேள்வி-பதில் நிகழ்ச்சிகள் என தொடர்ந்து ஆக்டிவாக இருந்த நடிகைகள், தற்போது அதையே மாதாந்திர சந்தா (Subscription) முறையாக மாற்றி வருமானம் ஈட்டும் புதிய வழியை தேர்வு செய்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்திய Subscription வசதியை பயன்படுத்தி, "Exclusive Content", "Behind The Scenes", "Subscribers Only Stories" என்ற பெயரில் ரசிகர்களிடமிருந்து மாதந்தோறும் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வரிசையில் தற்போது சீரியல் நடிகை ஹரிப்பிரியாவும் இணைந்துள்ளார். மாதம் ரூ.45 கட்டணம், முதல் 14 நாட்கள் இலவச ட்ரையல் என அறிவித்துள்ள அவர், பிரத்யேக பதிவுகள், வீடியோக்கள், ரசிகர்களுடன் நேரடியாக பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Haripriya Instagram Haripriya Nandita Swetha Darsha Gupta

ஏற்கனவே இந்த பட்டியலில் யாரெல்லாம்?

ஹரிப்பிரியாவுக்கு முன்பாகவே, நந்திதா ஸ்வேதா, தர்ஷா குப்தா, பிக் பாஸ் அபிராமி, ஜனனி அசோக்குமார் மேலும் பல சீரியல் மற்றும் சினிமா நடிகைகள் இதே Subscription வசதியை பயன்படுத்தி ரசிகர்களுக்கு கட்டண போட்டோஸ் மற்றும் வீடியோக்களை வழங்கி வருகின்றனர்.

சில சீரியல் சினிமா நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லாதபோது அவர்கள் இப்படி சோசியல் மீடியா மூலமாகவும் தங்களுடைய வருமானத்தை பெருக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

பணம் சம்பாதிக்கும் புதிய வழி

இதுதான் தற்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. "ரசிகர்களின் ஆதரவால்தான் இன்று இந்த நடிகைகள் இந்த இடத்தில் இருக்கிறார்கள். ஆனால் இன்று அதே ரசிகர்களிடமே மாதந்தோறும் பணம் வாங்கி அவர்களையே Subscriber ஆக மாற்றுவது சரியா?" என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சிலர், "இன்ஸ்டாகிராமும் இப்போது OTT மாதிரி ஆகிவிட்டது..." "இன்று ரூ.45... நாளை ரூ.500 ஆகிவிடும்..." "ஒவ்வொரு நடிகையும் ரசிகர்களை Paid Member ஆக்க போட்டி போடுகிறார்கள்..." "ஹரிப்பிரியாவும் அந்த வரிசையில் சேர்ந்துவிட்டாரா?" என்று விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்தும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன. தங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகைகளின் பிரத்யேக பதிவுகளை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிறிய தொகையாக இருந்தாலும் தொடர்ந்து Subscription-ஐ எடுக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக சிலர் கவலை தெரிவிக்கின்றனர்.

Haripriya Instagram Haripriya Nandita Swetha Darsha Gupta

"ஒரு நடிகைக்கு ரூ.45... இன்னொருவருக்கு ரூ.199... மற்றொருவருக்கு ரூ.399... என்று பலருக்கும் Subscription எடுத்தால், தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கும்" என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அதைவிட அவர்கள் கவர்ச்சிகரமான புகைப்படங்களை போஸ்ட் போடும்போது பல இளைஞர்களின் சிந்தனைகளும் மாறிக்கொண்டிருக்கிறது.

பல நாள் கனவு நிறைவேறியது.. நிஜ வாழ்க்கையில் சாதித்த ஹரிப்பிரியா.. புது முயற்சிக்கு குவியும் வாழ்த்து
தற்போதைய சூழ்நிலையில் பல பாலியல் பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் இதுபோன்ற நடிகைகள் தொடர்ந்து தங்களுடைய வருமானத்தை ஈட்டுவதற்காக மிகவும் கிளாமரான புகைப்படங்களை போஸ்ட் போட்டு இளைஞர்களின் மனதை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பலர் வேதனை தெரிவிக்கிறார்கள்.

மேலும், "ரசிகர் - பிரபலம் உறவு என்பது அன்பின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, முழுக்க முழுக்க பணம் செலுத்தும் உறவாக மாறக் கூடாது" என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மறுபக்கம் ஆதரவு

அதே நேரத்தில், ஹரிப்பிரியாவுக்கும் மற்ற நடிகைகளுக்கும் ஆதரவாக பேசுபவர்களும் உள்ளனர். "இது கட்டாயம் அல்ல. விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பணம் கொடுத்து பார்க்கலாம். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. ஒரு நடிகை தனது உழைப்புக்கு வருமானம் ஈட்டுவது தவறு இல்லை" என்று அவர்கள் கூறுகின்றனர்.

யூடியூப், பிராண்ட் புரமோஷன், ரீல்ஸ், Paid Collaboration ஆகியவற்றை தொடர்ந்து, தற்போது Instagram Subscription பல நடிகைகளின் புதிய வருமான வழியாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+