பல நாள் கனவு நிறைவேறியது.. நிஜ வாழ்க்கையில் சாதித்த ஹரிப்பிரியா.. புது முயற்சிக்கு குவியும் வாழ்த்து
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கேரக்டரில் நடித்த நடிகை ஹரிப்பிரியா டான்ஸ் கிளாஸ் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இதற்கு அதிகமானோர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
சீரியல் நடிகை ஹரிப்பிரியா தான் நடித்த எதிர்நீச்சல் சீரியல் முடிவடைந்ததை தொடர்ந்து தனக்கு தெரிந்த பரதநாட்டியத்தை முறைப்படி கற்றுக் கொடுக்க விரும்பி இருக்கிறார். அதனாலேயே “காளி கல்பா" என்ற பெயரில் நடன பள்ளி ஒன்றை ஹரிப்பிரியா தொடங்கி இருக்கும் நிலையில் அது குறித்த புகைப்படங்களை ஹரி பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் நிலையில் அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

அதே நேரத்தில் படிப்பில் கெட்டிகாரியாக இருக்கும் ஹரிப்பிரியா பிஎஸ்சி சைக்காலஜி படித்திருக்கிறாராம். படிப்பு மட்டுமல்லாமல் நடனத்திலும் இவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்ததால் நடனத்தையும் முறைப்படி கற்று இருக்கிறாராம். ஆரம்ப காலகட்டத்தில் காலேஜ் படிக்கும் போது ஒரு டைரக்டராக ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்போட இருந்த ஹரிப்ரியா அதற்காகத்தான் விஷ் காம் படித்திருக்கிறாராம்.
எதிர்நீச்சல் 2 எப்போ வரும்? குமுறும் ரசிகர்கள்.. போட்டோவுடன் போஸ்ட் போட்ட திருச்செல்வம்.. செம பஞ்ச்
இவர் டைரக்டராக வேண்டும் என்பதற்காக பல இன்டஸ்ட்ரிப் அட்டன்ட் செய்திருக்கிறாராம். அப்போது இவருடைய நண்பர்களும் அம்மாவும் இவர் ஆன் ஸ்கிரீனில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எவ்வளவோ சொல்லியிருக்கிறார்கள் .மனதிற்குள் ஆசை இருந்தாலும் இவர் அந்த அளவிற்கு அதில் விருப்பமில்லை என்று தவித்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் இவருடைய அம்மா கனா காணும் காலங்கள் ஆடிசனுக்காக பாஃம் எழுதி அனுப்பி கொடுத்து இருந்தாராம் .
முதல் சீரியலானா கனா காணும் காலங்கள் சீரியலில் ஹரிப்பிரியா எதிர்பார்க்காத அளவில் ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தை பிடித்து விட்டார். முதல் சீரியலில் ஹரிப்ரியா பிரியா என்ற பெயரில் நடித்திருந்தார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக விஷ்ணு நடித்திருப்பார் .ஆனால் அந்த சீரியலில் அவருடைய பெயர் அம்மாஞ்சி என்றுதான் இப்ப வரைக்கும் 90ஸ் கிட்ஸ் பலரும் அவரை கூப்பிட்டு வருகின்றனர்.

அந்த அளவிற்கு அவர் பிரபலமாகிவிட்டார். அதை தொடர்ந்து பல சீரியல்களில் இவர் நடித்திருந்தாலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான மேற்கு மாம்பழத்தில் ஒரு காதல் என்னும் சீரியலில் நடித்து இருந்தார். அந்த சீரியலில் வாணி ராணி சீரியலில் நடித்த விக்னேஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். அவரையே ஹரிப்பிரியா காதலித்து திருமணமும் செய்திருந்தார்.
இவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த ஒரு சில வருடங்கள் இவருடைய கணவரோடு இவருக்கு மகிழ்ச்சியாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. டிக் டாக் ஆக்டிவாக இருந்த காலகட்டத்தில் இவர்கள் இருவரும் பல வீடியோக்களை வெளியிட்டு ஜோடி என்றால் இதுதான் சூப்பர் ஜோடி என்று சொல்லும் அளவிற்கு வலம் வந்தனர். இந்த நிலையில் இவருக்கும் இவருடைய கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
அதற்குப் பிறகு ஹரிப்பிரியாவின் வாழ்க்கையில் பல போராட்டங்கள் ஏற்பட்டிருக்கிறது. முதல் திருமணம் இவர் எதிர்பார்க்காத வகையில் முடிவடைந்து விட்டாலும் அதனைத் தொடர்ந்து இவர் பல சீரியல்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இதுவரைக்கும் சுமார் 20 சீரியல் நடித்து இருக்கிறாராம். அதிலும் அதிகமான சீரியல்கள் சன் டிவியில் தான் நடித்திருக்கிறார்.
ஹரிப்பிரியாவுக்கு அதிக அளவில் பெயர் வாங்கி கொடுத்த சீரியல்களில் பிரியமானவள் சீரியலும் ஒன்று. அந்த சீரியலில் இசை கேரக்டரில் நடித்திருப்பார். இவர் அதிகமான பாசிடிவ் கேரக்டர் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் இவருக்கு கண்மணி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .இந்த சீரியலில் இவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்ததால் இவருக்கு நெகடிவ் ஆனா பல கமெண்ட்கள் வந்த வண்ணமாகவே இருந்தது. அது மட்டுமில்லாமல் பலரும் இவருக்கு இந்த மாதிரி கேரக்டர் உங்களுக்கு செட் ஆகாது என்று அறிவுரை கூறி வந்தனர்.
இதுவரைக்கும் இவர் எத்தனையோ சீரியல்களில் நடித்திருந்தாலும் நந்தினி கேரக்டர் ஹரிப்பிரியாவுக்கு அப்படியே செட் ஆகின்றது என சீரியலில் இவரோடு நடித்த நடிகர்களும் கூறி வருகின்றனர். எப்போதும் சூட்டிங் ஸ்பாட்டில் நந்தினி எப்படி சீரியல் இருக்கிறாரோ அதுபோலத்தான் ஜாலியாக இருப்பாராம். தன்னுடைய ஒரே பையனோடு தனியாக வசித்து வரும் ஹரிப்ரியா நந்தினி கேரக்டர் மூலமாக தன்னுடைய கடந்த கால கசப்பான வாழ்க்கையை மறந்து சந்தோஷமாக இருந்து வருவதாகவும், இப்போது இவருடைய மகனும் ஹரிப்பிரியாவுக்கு அதிகமாக சப்போர்ட் கொடுத்து வருவதாகவும் அவருடைய நண்பர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications