எதிர்நீச்சல் 2 எப்போ வரும்? குமுறும் ரசிகர்கள்.. போட்டோவுடன் போஸ்ட் போட்ட திருச்செல்வம்.. செம பஞ்ச்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின் முடிவுக்குப் பிறகு அந்த சீரியலின் இயக்குனரான திருச்செல்வம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் புகைப்படத்தோடு போஸ்ட் ஒன்று போட்டிருக்கிறார். இது அதிகமான வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் உருவான எதிர்நீச்சல் சீரியல் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் இருந்த நிலையில் திடீரென்று இந்த சீரியலில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து இறந்து போன பிறகு சீரியலின் கதை மாற்றப்பட்டது. ஆனால் அது ரசிகர்கள் விரும்பும் வகையில் இல்லை என்று தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வந்தனர். இப்படியான நிலையில் இந்த சீரியல் கடந்த ஜூன் 8-ம் தேதியோடு முடிவுக்கு வந்தது.

ஆனாலும் இந்த சீரியலில் இரண்டாவது பாகம் வருமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் இன்று இயக்குனர் திருச்செல்வம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு “பயணங்களும் மனிதர்கள் சந்திப்புகளும் எப்போதும் நம்மை புதுப்பிக்கும்” என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இந்த போஸ்ட் பார்த்த ரசிகர்கள் அதிகமானோர் திரு செல்வத்திடம் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் எப்போது வரும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
இன்னும் ஒரு சில ரசிகர்கள் சன் டிவியில் தான் திருச்செல்வத்திற்கு அதிகமான அழுத்தம் கொடுத்து விட்டார்கள். அதனால் அடுத்ததாக சன் டிவி சீரியல் இயக்காதீர்கள் என்று உரிமையாக வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதுபோல இன்னும் ஒரு சிலர் புது மனிதர்களை சந்திப்பதால் புத்துணர்வு உண்டாகும் என்று திருச்செல்வம் கூறியிருப்பதால் புது சீரியலுக்காக ஆடிஷன் தொடங்கி விட்டாரா? என்றும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஆனால் இது குறித்து திருச்செல்வம் எந்த கருத்துக்கும் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் திருச்செல்வன் குறித்து பார்க்கையில், திருச்செல்வம் பிறந்த ஊர், தஞ்சாவூர் தானாம். இவர் குடும்பமே ஒரு விவசாய குடும்பம் தான். நடிப்புக்கும் இவருடைய குடும்பத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் தான் இருந்திருக்கிறது.
அக்கா தங்கச்சி சென்டிமெட்டில் திருச்செல்வம் பட்டய கிளப்புவதற்கு காரணமே அவருடைய வீட்டில் அவருக்கு இரண்டு அக்காக்கள் இருப்பது தானாம். இவருடைய வீட்டில் திருச்செல்வன் தான் கடைக்குட்டியாக இருந்திருக்கிறார். இந்த நிலையில் தஞ்சாவூரில் இருக்கும் ஒரு காலேஜிலேயே தன்னுடைய படிப்பை முடிச்சு இருக்கார். படித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று அதிகமான ஆசை வந்திருக்கிறது. அதற்கான முயற்சிகளையும் எடுத்து இருக்கிறார்.
ஆரம்பத்திலேயே இவர் சவுண்ட் இன்ஜினியராக 5 வருடங்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்திருக்க, அதற்க்கு பிறகு தான் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் வேலை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் துணை இயக்குனராக வேலை செய்திருக்கிறார். அதை தொடர்ந்து தான் இவர் கோலங்கள் சீரியலில் ரைட்டர் ஆகவும், டைரக்டராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். அதோடு அந்த சீரியலில் நடிகராகவும் நடித்து பலருடைய மனதை கவர்ந்திருந்தார்.
என்னதான் டைரக்டராக இருந்தாலும் கேமராக்கு பின்னாடி இருப்பதால் பலருக்கும் தெரியாது. ஆனால் இவர் முதல் முறையாக தொல்காப்பியன் என்கிற கேரக்டரில் நட்புக்கு இலக்கணமாக நடித்து பலருடைய மனதில் பசை போல ஒட்டிக்கொண்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications