தொடர்பு இல்லைன்னாரே.. மணிகண்டன் செய்த வேலையை பாருங்க.. சாந்தினி வெளியிட்ட பரபர சிசிடிவி காட்சிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மணிகண்டன் தொடர்பான சிசிடிவி காட்சி ஒன்றை அவர் மீது புகார் கொடுத்துள்ள நடிகை சாந்தினி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

Recommended Video

    Shantini வெளியிட்ட CCTV காட்சிகள், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான ஆதாரம்!

    அந்த காட்சிகள் தற்போது வெளியே கசிந்து உள்ளதால் அதை பார்ப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    3 முறை கருக் கலைப்பு

    3 முறை கருக் கலைப்பு

    அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த மணிகண்டன் 5 வருடங்களாக சென்னையில் தன்னுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தினார் என்பது நடிகை சாந்தினியின் குற்றச்சாட்டு. இதன் மூலம் மூன்று முறை தான் கருவுற்று அது மணிகண்டனின் நண்பரான மருத்துவர் மூலமாக கலைக்கப்பட்டதாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சாந்தினி சமீபத்தில் புகார் அளித்திருந்தார்.

     காப்பர்-டி

    காப்பர்-டி

    தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியபோது மணிகண்டன் அடித்துத் துன்புறுத்தியதாகவும் குமுறலுடன் கூறியிருந்தார் சாந்தினி. மாதவிடாய் காலங்களிலும் உடலுறவு வைத்துக்கொள்ள மணிகண்டன் கட்டாயப்படுத்தினார், காப்பர்-டி அணிந்து உறவு வைத்துக் கொண்டால் கரு உருவாகாது என்பதால் அதை தனக்கு போடுவதற்கு கட்டாயப்படுத்தினார் இதனால் தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது என்று தனது 6 பக்க புகார் மனுவில் பரபரப்பு தகவல்களை தெரிவித்திருந்தார் சாந்தினி.

    மணிகண்டன் மீது புகார்

    மணிகண்டன் மீது புகார்

    இதையடுத்து மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மணிகண்டனுக்கு, நெருக்கமானவர்களுடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்டனை தொடர்புகொண்டு விசாரிப்பதற்கு காவல் துறை முயற்சி செய்து வந்தாலும், அவர் எங்கே இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

    மணிகண்டன் குற்றச்சாட்டு

    மணிகண்டன் குற்றச்சாட்டு

    ஆனால் மணிகண்டன் ஏற்கனவே அளித்த பேட்டி ஒன்றில் சாந்தினிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் கிடையாது, அவர் பணம் பறிப்பதற்காக இவ்வாறு பிளாக் மெயில் செய்கிறார் என்று குற்றச்சாட்டு சுமத்தி இருந்தார். அதேபோன்று மணிகண்டனின் மனைவியும் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி யை சந்தித்து தனக்கும் தனது குடும்பத்துக்கும் சாந்தினி மிகவும் தொந்தரவு கொடுக்கிறார் அவரது புகாரில் உண்மையில்லை என்று கூறியிருந்தார்.

    சிசிடிவி காட்சிகள்

    சிசிடிவி காட்சிகள்

    இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்கும்படி ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி அடையாறு காவல்துறையினருக்கு பரிந்துரை செய்திருந்தார். இந்த நிலையில்தான் மணிகண்டனுக்கும் தனக்கும் இருந்த தொடர்பு தொடர்பாக ஒரு பரபரப்பான சிசிடிவி காட்சிகளை சாந்தினி தரப்பு தற்போது காவல் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளது. மே மாதம் 23ஆம் தேதி தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், சைதாப்பேட்டையில் உள்ள சாந்தினியின் வழக்கறிஞரை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது அலுவலகத்துக்கு வெளியே இருந்த சிசிடிவி கேமராவில் மணிகண்டன் வந்து சென்றது பதிவானதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் தான் தற்போது காவல்நிலையத்தில் வழங்கப்பட்டு உள்ளது.

    முகக் கவசம்

    முகக் கவசம்

    ஆனால் அந்த காட்சியில் மணிகண்டன் போன்ற உருவ அமைப்புடன் கூடிய நபர், தனது முகத்தில் முக கவசம் அணிந்து நடந்து செல்வது பதிவாகியுள்ளது. முகக்கவசம் இருப்பதால் அது மணிகண்டன் என்று நிரூபிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் உருவ அமைப்பை வைத்து பார்த்தால் அது மணிகண்டனை போல தெரிகிறது. இந்த வழக்கில் இந்த சிசிடிவி காட்சிகள் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    எதற்காக சந்தித்தார்

    எதற்காக சந்தித்தார்

    சாந்தினியுடன் தொடர்பு இல்லை என்று கூறிய மணிகண்டன், எதற்காக அவரது வழக்கறிஞரை மே 23ஆம் தேதி சைதாப்பேட்டைக்கு சென்று சந்திக்க வேண்டும் என்ற கேள்வி இந்த வழக்கில் எழுந்துள்ளது. இதனிடையே தனது ஐ போனை முடக்கி ஹேக் செய்து அதில் உள்ள ஆதாரங்களை அழிப்பதற்கு சிலர் முயற்சி செய்வதாகவும் சாந்தினி போலீஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார். மெயில் லிங்க் ஒன்று தனக்கு அனுப்பப்பட்டதாகவும் சிபிஐ ஆபீஸர் என்று ஒருவர் பேசிக் கொண்டு இந்த லிங்க்கை அனுப்பி வைத்ததாகவும், அதை கிளிக் செய்தால் தனது செல்போன் முழுவதுமாக ஹேக் செய்யப்பட வாய்ப்பு இருந்ததாகவும் சாந்தினி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

    பேசுவாரா மணிகண்டன்

    பேசுவாரா மணிகண்டன்

    தினம் தினம் ஒரு திருப்பங்களுடன் இந்த வழக்கு சென்று கொண்டிருப்பதால் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. மணிகண்டன் அடுத்ததாக கூறப்படும் தகவல் அடிப்படையில் தான் இந்த வழக்கு அடுத்த கட்டத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இதுவரை சாந்தினி தரப்பு வழங்கக்கூடிய புகார் மட்டும்தான் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மணிகண்டன் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+