Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"குறியீடு".. சிவன் கழுத்தில் "நாகம்".. பவுத்தத்தின் அடையாளமா.. திருமாவளவனின் ட்வீட்.. பரபர விவாதம்

திருமாவளவன் பதிவிட்ட ட்வீட் பல்வேறு அதிர்வலைகளை உருவாக்க வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நாகம்" இந்துத்துவத்தின் அடையாளம் கிடையாது.. அது பெளத்தத்தின் அடையாளம் என்று விசிக தலைவர் திருமாவளவன் ட்வீட் பதிவிட்டிருந்தார்.. இந்த ட்வீட் பல்வேறு அதிர்வலைகளை அரசியல் தளத்தில் ஏற்படுத்தி உள்ளது.. அத்துடன் இருவேறு விதமான கருத்துக்களையும், விவாதங்களையும் உள்ளடக்கியும் வருகிறது.

வழக்கமாக திருமாவளவன் எது செய்தாலும் சரி, என்ன பேசினாலும் சரி, அவரது ஒவ்வொரு அசைவிலும் பண்டைய தமிழனின் வரலாறும் மாண்பும் பொதிந்திருக்கும்..

எதையுமே வெறுமனே கோடிட்டு காட்டி பேச மாட்டார்.. உள்ளே இறங்கி தூர் வாரி அலசி ஆராய்ந்து, புள்ளிவிவரங்களுடன் ஆதாரத்துடன் பேசுவார்.

 சிறுபான்மையினர்

சிறுபான்மையினர்

இன்றைய சூழலில், முழு தரவுகளுடன் பேசும் தமிழக தலைவர்கள் வெகுசிலரில் திருமாவும் ஒன்று.. அந்த வகையில், தான் ஒரு புத்த மதத்தை சார்ந்தவன் என்பதை வெளிப்படையாக சொல்லியும் கொள்பவர்.. ஒருமுறை திருமாவளவன் பேசும்போது, "முஸ்லீம்களை, கிறித்தவர்களை தாய் மதத்திற்கு திரும்ப வேண்டும் என்று சொன்னால், இந்துக்களின் தாய் மதமான புத்த மதத்திற்குதான் திரும்ப வேண்டும்" என்று அதிரடியாக தெரிவித்திருந்தார்.

நாகர்கள்

நாகர்கள்

பெரும்பாலும் அம்பேத்கரை முன்னிறுத்தியே தன்னுடைய கருத்துக்களை வலிய உரைப்பவர் திருமா.. அதனால்தான், இந்த தேசத்தில் அன்று வாழ்ந்தவர்கள் "நாகர்கள்" தமிழர்களே என்பதை அம்பேத்கர் ஆய்வு செய்ததை, தற்போது உலக தமிழர்களுக்கு தெரிவிக்க திருமாவளவன் முற்பட்டுள்ளார்.. இது அவ்வளவு எளிதான காரியம் இல்லை..

வரலாறு

வரலாறு

நூற்றாண்டு காலமாக, பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்ட ஒரு விஷயத்தை மாற்றி, நிஜவரலாற்றை எடுத்தியம்புவதற்கு தனி துணிச்சல் வேண்டும்.. அயராது உழைப்பு வேண்டும்.. விமர்சனங்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.. அரசியல் பாகுபற்ற நிலைப்பாடு வேண்டும்.. அதில் ஒன்றுதான், நாகர்கள் என்ற அடையாளமும்..!

மாநாடு

மாநாடு

உலக செம்மொழி மாநாட்டிலும் அம்பேத்கரின் இந்த ஆய்வை முன்வைத்து ஏற்கனவே திருமாவளவன் பேசியிருந்தார்... அம்பேத்கரின் புகழை பரப்பி வருவதுடன், தமிழனின் பொதிந்து போன வரலாற்றையும் தோண்டி எடுத்து வந்து தமிழனின் கைகளில் ஒப்படைக்கும் நோக்கத்திலும் களமிறங்கி உள்ளதாகவே தெரிகிறது.. இந்த முயற்சி எந்த அளவுக்கு தற்போது தாக்கத்தை தந்துள்ளது என்றால், நாகம் என்பது இந்துத்துவத்தின் அடையாளம் கிடையாது, அது பெளத்தத்தின் அடையாளம் என்பதை விசிகவினரே முழுமையாக ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு வெற்றி கிடைத்துள்ளதுதான்.

ட்வீட்கள்

ட்வீட்கள்

இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார் திருமாவளவன்.. அதில், "பௌத்தம் நாகர்களின் வாழ்வியல் நெறி. நாகம் பௌத்தத்தின் குறியீடு. புத்தர் நாகவம்சத்தின் ஞானமுதல்வன். கழுத்தில் நாகத்துடன் சிவன். ஆதிசேஷன் படுக்கையில் அரங்கன். இவை பௌத்தத்தின் திரிபுகளாக பரிணமித்த குறியீடுகளோ? புத்தரும், நாகமும் வைதீகப் பகையே. நாகவம்சம் உலகை உய்விக்கும் ஞானவம்சம்" என்று தெரிவித்துள்ளார்.

சிவன்

சிவன்

இதன் சாராம்சம் என்னவென்றால், பெளத்தம் என்பது நாகர்களுடையது... நாகம் என்பது பெளத்த மதத்தின் குறியீடு... ஆனால் நாகத்தையோ சிவன் கழுத்தில் சுமந்துள்ளார்... எனவே, பெளத்த மதத்தை திரித்து, அவற்றை இந்து கடவுளாகிய சிவனுக்கு உரியதாக மாற்றிவிட்டார்கள் என்ற பொருளில்தான் இந்த ட்வீட்டை திருமாவளவன் பதிந்துள்ளார்.

அம்பேத்கர்

அம்பேத்கர்

இந்த ட்வீட் இருவேறு விதமான கருத்துக்களை சோஷியல் மீடியாவில் ஏற்படுத்தி வருகிறது.. "நம்ம மக்களுக்கு அம்பேத்கரை பற்றியே சரியாக தெரியவில்லை... நீங்கள் சொல்லும் 3000 வருட பழமையான பௌத்தம் பற்றி எப்படி புரியும்? நீங்க தமிழை தப்பா எழுதுறீங்க என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்? இவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு நாம எப்போ வல்லரசாகிறது? என்று திருமாவின் ட்வீட்டுக்கு ஒருவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தாய்மொழி

தாய்மொழி

"நாகர்கள் வைதீகத்தின் பகை. நாகவம்சம் உலகை உய்விக்கும் ஞானவம்சம் தான்... "இந்திய துணை கண்ட முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழை தாய் மொழியாக கொண்ட நாகர்கள்." என்று அண்ணல் அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.. தமிழரும் நாகரும் ஒன்றே.. தமிழர்கள் வைதீக மத பகையாளிகளே...." என்று மற்றொரு ஆதரவு ட்வீட் வந்து விழுகிறது.

ட்வீட்

ட்வீட்

மற்றொரு புறம், திருமாவின் ட்வீட் பல்வேறு எதிர்ப்புகளை சம்பாதித்து கொண்டிருக்கிறது.. "பாம்பு மாத்திரையின் திரிபுதான் புத்தரோ? அமைதியை விரும்பிய புத்தரை... கலகம் மூட்டுவது ஒன்றையே குழத்தொழிலாக கொண்டுள்ள நீங்கள் கொண்டாடுவது எல்லாம் என்ன மாதிரி டிசைன்ன்னு தெரியவில்லை. கிறிஸ்துவரா மாறி, அங்கே மரியாதை கிடைக்காததால் இப்பொழுது புத்த மதத்திற்கு மாற போகிறீர்களா? உண்மையான நோக்கம், இந்து மத அடையாளங்களை அழிப்பது" என்கிறார் ஒருவர்.

இந்தியா

இந்தியா

"உருவ வடிவில் உயிருள்ள கடவுளாக புத்தரை மக்கள் வழிபடும்போது இந்து மதம் விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் உருவங்களை கொடுக்கிறது... இந்தியாவில் முதல் உருவ வழிபாடு புத்தரை அடிப்படையாக கொண்டுதான் தோன்றியிருக்க வேண்டும் என்பது எனது கணிப்பு. தவறிருந்தால் கற்றவர்கள் சொல்லட்டும்.. கேட்டு கொள்கிறேன்" என்கிறார் மற்றொருவர்.

 இனப்படுகொலை

இனப்படுகொலை

"இவ்வளவு பேசும் நீங்கள் புத்த மதத்திற்கு மாறி எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கலாமே? அமைதி & உயிர்களை கொல்வது குற்றம் கொள்கை கொண்ட புத்த மதம் சார்ந்த நாடுகள் தான் இனப்படுகொலையே செய்தார்கள் " என்கிறார் இன்னொருவர்.

கோரிக்கை

கோரிக்கை

இப்படி ஆதரவும், எதிர்ப்புமாக கருத்துக்கள் எழுந்து வந்தாலும், மேலும் சிலர் இந்த விவகாரத்துக்குள் நுழைய விரும்பவில்லை.. மாறாக, திருமாவுக்கு கோரிக்கை விடுக்க ஆரம்பித்துவிட்டனர்.. "மதம் பற்றிய பேச்சுக்களை விடுத்து தொகுதி, நலப்பணிகளை செவ்வனே செய்யுங்கள்... அது உங்கள் பெயர் சொல்லும்.. அறிவியல் வழி சிந்தனை மட்டுமே மனித முன்னேற்றத்தின் வழி... எல்லோருக்கும் அடிப்படைக் கல்வி, அறிவியல் சிந்தனையோடு, வழங்கப்பட வேண்டும்.. பள்ளி/கல்லூரி புரவலர் மூலம் உருவாக்குங்கள்" என்று சமூக அக்கறையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..

 ஆதரவும் - எதிர்ப்பும்

ஆதரவும் - எதிர்ப்பும்

திருமாவளவனை பொறுத்தவரை, இந்து மதத்துக்கு எதிரானவர், இந்து கொள்கைகளை அழிப்பவர், இந்து பெண்களை அவதூறாக பேசுபவர் என்ற கருத்துக்களும் உள்ளன.. ஆனால், திருமாவின் நோக்கமோ, சமத்துவத்தை நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது.. பெரும்பான்மையினர், சிறுபான்மையினராக இருப்பவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்... இதுவே ஜனநாயகத்தின் சிறப்பம்சம் என்பதே திருமாவின் தீர்மானமாக உள்ள நிலையில்,தற்போது பதிவிட்டுள்ள இந்த பவுத்தம் தொடர்பான நாகம் ட்வீட் எந்த அளவுக்கு தாக்கத்தை தர போகிறது என்பதை பொறுத்திருந்ததுதான் பார்க்க வேண்டும்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+