பெரிய சம்பவம்.. மீன் பிடிக்க போன பெண்.. நாகப்பட்டினமே அரண்டு கிடக்கு.. இப்படி எங்காச்சும் நடக்குமா?
சென்னை: விஷத்தன்மை வாய்ந்த மீன்களை சாப்பிட்டு, அதன்மூலம் உயிரிழப்புகள் அரிதாக நடந்துள்ள நிலையில், நாகையில் நடந்த சம்பவம், பேரதிர்ச்சியாக நமக்கு விழுந்துள்ளது.
சில மீன்களில், இயற்கையாகவே பாதரசம் அதிகமாக கலந்திருக்கும்.. விஷத்தன்மை நிறைந்த இந்த மீன்களை, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடக்கூடாது என்பார்கள்.-

முரல் மீன்கள் என்று ஒருவகை மீன்கள் உள்ளன.. இவைகள் பார்ப்பதற்கு பாம்பு போலவே இருக்கும். சில சமயம், கடல் குதிரை போலவும் இருக்கும்.. மற்ற மீன்களுக்கும், இந்த முரால் மீனுக்கும் உள்ள வித்தியாசமே, இதன் குறுகிய நீண்ட தாடையும், கூரான பற்களும்தான்.
இதன், மூக்கு குறுகி காணப்பட்டாலும், கூரான பற்கள் நீளமாக நீட்டிக்கொண்டு இருக்கும். கத்தி போலவே, மூக்கு இருக்கும்.. மனித உடலையே துளைத்துவிடும் அளவுக்கு இந்த மூக்கு கூர்மையானது..
காயங்கள்: படுவேகமாக படகுகள் சென்றாலோ, அல்லது வெளிச்சம் தென்பட்டுவிட்டாலோ, பயந்துகொண்டு வேகமாக கடலுக்குள் பாய்ந்து சென்றுவிடுமாம் இந்த மீன்கள்.. அப்படி பாயும்போது, படகில் மனிதர்கள் இருந்தால், அவர்களுக்கு காயங்களையும் இந்த மீன்கள் ஏற்படுத்திவிடும். இப்படித்தான் வியட்நாமில், ஒரு சிறுவனின் இதயத்தையே, குத்தி கிழித்து சாகடித்து விட்டதாம்.
கடலில் யாராவது நீந்தினாலும், இந்த முரல் மீன் தாக்கிவிடும்.. நம்முடைய தஞ்சை மாவட்ட அதிரம்பட்டினத்தில், மீனவர் ஒருவரை இந்த முரால் மீன் தாக்கியதாக சொல்கிறார்கள். ஆனால், எந்த காரணம்கொண்டும், வேண்டுமென்றே மனிதர்களை இந்த மீன் தாக்குவது கிடையாது.. எனினும், மீன் தாக்கி உயிரிழப்புகள் என்பது அரிதாகவே நடந்துள்ளது.
இறால் மீன்: இந்நிலையில், ஒரு பெண் மீன் கடித்து இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. நாகை மாவட்டம், பழங்காலமேட்டைச் சேர்ந்தவர் கனகவல்லி. இவர், கள்ளிவேடு அடைப்பாற்றில் இறால் மீன் பிடிக்க சென்றிருக்கிறார்.. அப்போது ஆற்றில் இருந்த மீன் ஒன்று, கனகவல்லியின் காலில் பலமாக கடித்ததாக தெரிகிறது. இதில் ரத்தம் அதிகமாக வெளியேறியுள்ளது.
மீன் கடித்ததால், வலி பொறுக்க முடியாமல், கனகவல்லி கதறி அலறியிருக்கிறார்.. இதனால், அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓடிவந்துள்ளனர். உடனடியாக கனகவல்லியை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் அதற்குள் கனகவல்லி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்..
இது குறித்து தகவலறிந்த வேட்டைக்காரனிருப்பு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கனகவல்லியின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்..
என்ன காரணம்: இது குறித்து போலீசாரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்... போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான், உடம்பில் ஏறிய விஷத்தன்மை குறித்து தெரியவரும்.. எந்த மீன் கடித்தது என்றும் தெரியவில்லை.. மீன்கடித்து பெண் உயிரிழந்த சம்பவம், நாகையில் மட்டுமல்லாத, நம்முடைய கடலோர மாவட்டங்களுக்கே பேரதிர்ச்சியை தந்து வருகிறது.
இந்நிலையில், உயிரிழந்த பெண் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.. பழங்கள்ளிமேடு பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி. என்பவரது மனைவிதான் இந்த கனகவல்லி.. 57 வயதாகிறதாம்.. இவர் அதே பகுதியில் உள்ள அடப்பாற்றில் இறால் மற்றும் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வந்துள்ளார்..
மீன்பிடி தொழில்: இவர்தான் மீன் பிடிக்கவும் அடப்பாற்றுக்கு போவாராம்.. அப்படித்தான் வழக்கமாக, மீன்பிடிக்க சென்றுள்ளார்.. இவருடன், அதே பகுதியை சேர்ந்த 5 பேரும் ஆற்றில் இறங்கி, இறால் மீன்களை பிடித்து கொண்டிருந்திருக்கிறார்கள்.. அப்போதுதான் எதிர்பாராத விதமாக ஆற்றில் இருந்த மீன் கடித்துள்ளது..
பெரிய திருக்கை: பெரிய திருக்கை மீன் தாக்கிவிட்டது என்கிறார்கள்.. இந்த திருக்கை மீனின் முட்கள், கனகவல்லி மீது குத்தியதில் அதிகப்படியான ரத்தம் வெளியேறியதாகவும், இதனால், சம்பவ இடத்திலேயே அவர் மயக்கம் அடைந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.. ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். உயிரிழந்த கனகவல்லிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்களாம்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications