Exclusive: மத்திய அமைச்சர் பதவி தருவதாக சொன்னார்கள்.. வேண்டாம் என்று சொன்னேன்.. மனம் திறந்த நக்மா

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் கட்சியில் 2003-ம் ஆண்டு தாம் இணைந்த போது, பிஸியான ஹீரோயினாக 9 மொழி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்ததாக கூறுகிறார் நக்மா.

காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத காலகட்டமான 2003-ம் ஆண்டு அதில் இணைந்த போது, வாய்ப்பு வரும் போது ராஜ்யசபா சீட் தருவதாக சோனியாகாந்தி தன்னிடம் கூறியதாக தெரிவிக்கிறார் நக்மா.

காங்கிரஸ் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட 10 இடங்களுக்கான ராஜ்யசபா சீட் வேட்பாளர்கள் பட்டியலில் நக்மாவின் பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து இது தொடர்பான தனது அதிருப்தியை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.

இதனிடையே அது குறித்து பேசுவதற்காக ஒன் இந்தியா தமிழ் அவரை தொடர்பு கொண்டு பேசியது. அப்போது அவர் கூறியதாவது;

2003-ஆம் ஆண்டு

2003-ஆம் ஆண்டு

''2003-ஆம் ஆண்டு நான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தபோது மிகவும் பிஸியான ஒரு ஹீரோயினாக இருந்தேன். ஒரு மொழி இரண்டு மொழி அல்ல 9 மொழி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். இந்தியா முழுவதும் என்னை மக்களுக்கு தெரியும். 2004-ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. ஆனால் நான் தான் அதை வேண்டாம் என்று கூறி தவிர்த்தேன்.''

சினிமாவில் பிஸி

சினிமாவில் பிஸி

''ஏனென்றால் அப்போது சினிமாவில் நான் ரொம்ப பிஸியாக இருந்த நேரம். நான் நினைத்திருந்தால் அப்போதே மத்திய அமைச்சராக ஆகியிருக்க முடியும். கட்சிக்காக எல்லா தேர்தல்களிலும் பிரச்சாரம் செய்திருகிறேன். 7 வருடங்களாக மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், இரண்டு ஆண்டுகளாக மும்பை காங்கிரஸ் துணைத் தலைவராகவும் இருந்து வருகிறேன். வெறும் பேட்டிகள் மட்டும் கொடுக்காமல் கட்சிப் பணிகளில் இறங்கி வேலை செய்து வருகிறேன்.''

ஜனநாயகம் உண்டு

ஜனநாயகம் உண்டு

''இதைவிட எனக்கு வேறு என்ன தகுதி வேண்டும் என நினைக்கிறீர்கள். இதனால் தான் நேற்று எனது அதிருப்தியை தெரியப்படுத்தினேன். எங்கள் கட்சியில் ஜனநாயகம் உண்டு என்பதால் எனது கருத்துச்சுதந்திரத்திற்கு யாரும் தடைபோடவில்லை. கட்சித் தலைமையிடம் இது குறித்து பேசிவிட்டேன். என்ன பேசினேன் என்பதையெல்லாம் உங்களிடம் சொல்ல முடியாது. எல்லாவற்றுக்கும் இங்கு கேஸ்ட் பார்ப்பது மட்டும் எனக்கு தெளிவாக புரிகிறது. அதைப்பற்றி விரிவாக பேச விரும்பவில்லை.''

 பாஜக அழைப்பு

பாஜக அழைப்பு

''காங்கிரஸில் நீங்க அதிருப்தியில் இருப்பதால் பாஜகவில் இருந்து அழைப்பு வந்ததா என வினவினோம். அதற்கு பதில் கூறிய அவர், ''ஏன் இல்லை, அழைப்பு வந்து கொண்டு தான் இருக்கிறது. பாஜக என்றில்லை பல கட்சிகளில் இருந்தும் எனக்கு அழைப்பு வந்துக் கொண்டுதான் இருக்கிறது. இதை மறைக்க விரும்பவில்லை. ஆனால் வேறு கட்சிக்கு செல்ல வேண்டும் என இதுவரை நான் நினைக்கவில்லை.''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+