சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேசாமல் புதுமுகத்தைப் போட்டால் என்ன... தமிழக பாஜக தலைவராகிறாரா நயினார் நாகேந்திரன்?

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக பாஜகவுக்கு அடுத்த தலைவர் யார்.. கடும் போட்டியில் 6 தலைவர்கள்

    சென்னை: தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார் என்பது குறித்த விவாதங்கள் களைகட்டி வருகின்றன. தற்போதைய இந்துத்துவா முகங்கள் அல்லாமல் 'திராவிட' கட்சி முகமாக நயினார் நாகேந்திரனை தமிழக பாஜக தலைவராக்க வாய்ப்புகள் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புகள் தொடர்ந்து எட்டா கனியாகவே இருந்து வருகிறது. ஆனாலும் தமிழக, கேரளா பாஜக தலைவர்களுக்கு பாஜக மேலிடம் தொடர்ந்து முக்கியத்துவம் தருகிறது.

    கேரளாவின் பாஜக தலைவராக பணியாற்றிய கும்மனம் ராஜசேகரன் திடீரென கடந்த ஆண்டு மிசோரம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆனால் தமக்கு அப்பதவியில் நீடிக்க விருப்பம் இல்லை என அவர் கூறி வந்தார்.

    சுங்க கட்டணத்துக்கான காரணம் கந்துவட்டியைவிட படுமோசமானது.. ராமதாஸ் கடும் கண்டனம்சுங்க கட்டணத்துக்கான காரணம் கந்துவட்டியைவிட படுமோசமானது.. ராமதாஸ் கடும் கண்டனம்

    தேர்தலில் கும்மனம் ராஜசேகரன் தோல்வி

    தேர்தலில் கும்மனம் ராஜசேகரன் தோல்வி

    இதனையடுத்து பதவியை ராஜினாமா செய்த கும்மனம் ராஜசேகரன், லோக்சபா தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸின் சசிதரூரை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை.

    மத்திய இணை அமைச்சராக முரளிதரன்

    மத்திய இணை அமைச்சராக முரளிதரன்

    அதேபோல் கேரளா பாஜக தலைவராக பணியாற்றிய முரளிதரன், மகாராஷ்டிராவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக்கப்பட்டார். தற்போது மத்திய இணை அமைச்சராக பணியாற்றி வருகிறார்.

    தெலுங்கானா ஆளுநராக தமிழிசை

    தெலுங்கானா ஆளுநராக தமிழிசை

    இதே பாணியில்தான் தமிழக பாஜக தலைவராக பணியாற்றி வந்த தமிழிசை சவுந்தரராஜன் திடீரென தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தனைக்கும் தமிழிசையின் தலைமையின் கீழ் தமிழகத்தில் பாஜக எந்த ஒரு தேர்தலிலும் வெற்றியை பெற்றது இல்லை. தமிழிசையும் சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைத்தான் சந்தித்தவர். இருப்பினும் தென்மாநிலங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற அடிப்படையில் தமிழிசை ஆளுநராக்கப்பட்டிருக்கிறார். இப்பதவி காலம் முடிவடைந்ததும் அவர் மீண்டும் தீவிர அரசியலுக்கும் திரும்பலாம்.

    தலைவர் பதவி ரேஸ்

    தலைவர் பதவி ரேஸ்

    இதனிடையே தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்துத்துவா கொள்கைகளை தீவிரமாக பேசும் எச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன் என பலரது பெயரும் அடிபடுகிறது.

    நயினார் நாகேந்திரனுக்கு வாய்ப்பு?

    நயினார் நாகேந்திரனுக்கு வாய்ப்பு?

    ஆனால் பாஜக மேலிடமோ, தீவிர இந்துத்துவா கொள்கை பேசுபவர்களால் தமிழகத்தில் பாஜகவை வளர்க்க முடியாது; ஆகையால் திராவிட கட்சி சார்ந்த முகம் ஒன்றை முன்னிறுத்தலாம் என கணக்குப் போடுகிறதாம். இதனடிப்படையில் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு தாவிய நயினார் நாகேந்திரனை தலைவராக்கலாமா? என ஆலோசிக்கப்படுகிறதாம். இந்துத்துவா கொள்கைகளை அதிதீவிரமாக பேசி மக்களிடம் இருந்து அன்னியப்படாமல் ஒரு திராவிட கட்சி சாயலில் மக்களிடம் நெருங்குவதற்கு நயினார் நாகேந்திரன் நியமனம் உதவும் என நம்புகிறதாம் பாஜக மேலிடம். இதனால் அவருக்கு தமிழக பாஜக தலைவராக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்கின்றன டெல்லி தகவல்கள்.

    English summary
    According to the sourcse Former AIADMK Minister Nainar Nagendran will be appoint as the President of Tamilnadu BJP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X