உறுதியான கூட்டணி.. தேசிய ஜனநாயக பேனர் முன் எடப்பாடி - அமித் ஷா.. ட்விஸ்ட் வைத்த அதிமுக - பாஜக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களை சந்திக்க உள்ள நிலையில், காலை நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பேனர் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பேனர் அகற்றப்பட்டு, பாஜக நிர்வாகிகள் அடங்கிய பேனர் மாற்றப்பட்டது. இதன்பின் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பேனர் வைக்கப்பட்டது.

தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் நியமனம் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். நேற்றிரவு தமிழ்நாடு வந்த அமித் ஷா, பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் துக்ளக் குருமூர்த்தியுடன் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

aiadmk bjp alliance bjp admk amit shah Annamalai Edappadi Palanisamy

ஆர்எஸ்எஸ் தயக்கம்

ஆர்எஸ்எஸ் கருத்துகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் துக்ளக் குருமூர்த்தி கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை செய்ததாக தெரிகிறது. அதேபோல் ஆர்எஸ்எஸ் பின்னணி இல்லாத நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக நியமிப்பதற்கு தயக்கம் காட்டுவதாகவும் கூறப்பட்டது.

கமலாலயத்தில் நயினார் நாகேந்திரன்

இருந்தாலும் மறுபுறம் கமலாலயத்தின் வாசலை தொட்டு கும்பிட்டு நயினார் நாகேந்திரன் மாநில தலைவர் தேர்தலுக்கான விருப்ப மனுவை பெற்றதாக தெரிய வந்தது. பாஜகவில் இணைந்து 8 ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், நயினார் நாகேந்திரனுக்காக பாஜக விதிகள் தளர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி பேனர்

இதனிடையே மத்திய அமைச்சர் அமித் ஷா கிண்டியில் உள்ள பிரபல தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். அதற்காக காலையில் இருந்தே ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக அமித் ஷாவுடன் சேர்த்து 7 நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அதேபோல் பிரஸ் மீட் மேடைக்கு பின் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாடு என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

பேனர் மாற்றம்

ஆனால் தற்போது அமித் ஷா செய்தியாளர்களை சந்திக்கவுள்ள நிலையில், கடைசி நேரத்தில் பேனர் மாற்றப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி பேனருக்கு பதிலாக, பாஜக தலைவர்கள் மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நயினார் நாகேந்திரனின் புகைப்படமும் அந்த பேனரில் இடம்பெற்றிருந்தது.

மீண்டும் மாறிய பேனர்

இதனைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சென்று சந்தித்தார். இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து, அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தனர். அப்போது பாஜக நிர்வாகிகள் அடங்கிய பேனர் மாற்றப்பட்டு, மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பேனர் வைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+