அண்ணாமலை போட்டோ அருகே.. வைக்கப்பட்ட நயினார் போட்டோ.. காட்சிகள் மாறியது.. பாஜகவில் ட்விஸ்ட்
சென்னை: பாஜக தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடக்க உள்ளது. இந்த நிலையில் பாஜக பிரஸ் மீட் பேனரில் முக்கியமான மாற்றம் நடந்து உள்ளது.
பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரனை கொண்டு வருவதில் ஆர்எஸ்எஸ் தயக்கம் காட்டி வருகிறதாம். ஆனால் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக அமித் ஷா இருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலை உள்ளிட்டோர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக பேசும் நிலையில் அமித் ஷா நயினார் நாகேந்திரன் பக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. பாஜக அலுவலகம் வந்த நயினார் நாகேந்திரன் அலுவலகம் வாசலை தொட்டு வணங்கினார்.

இன்று அதிமுக கூட்டணி பற்றியும் அறிவிப்பு வரும் என்கிறார்கள். ஆனால் அமித் ஷாவை சந்திக்க கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் வராததால் அமித்ஷா செய்தியாளர் சந்திப்பில் பேனர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ITC நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் இன்று தேஜகூ அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
நயினார் போட்டோ
பாஜக தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடக்க உள்ளது. இந்த நிலையில் பாஜக பிரஸ் மீட் பேனரில் முக்கியமான மாற்றம் நடந்து உள்ளது. இந்த நிலையில் பிரஸ் மீட் பேனரில் நயினார் நாகேந்திரன் போட்டோ வைக்கப்பட்டு உள்ளது. எல் முருகனுக்கு அருகே இவரின் போட்டோ வைக்கப்பட்டு உள்ளது. அண்ணாமலை போட்டோவிற்கு மேலே இவரின் போட்டோ இடம்பெற்று உள்ளது. நயினார் நாகேந்திரன் 2.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
முக்கிய ஆலோசனை
இரண்டு நாள் பயணமாக மத்திய அமைச்சரும், மூத்த பாஜக தலைவருமான அமித் ஷா நேற்றிரவு சென்னை வந்தார். இன்று அவர் பல சந்திப்புகளை ஆலோசனைகளை, கூட்டங்களை நடத்த உள்ளார். முக்கியமாக பாஜக புதிய மாநிலத் தலைவர் நியமனம் தொடர்பாக ஆலோசனை செய்யப்படுகிறது. 2023ல் அதிமுக பாஜக கூட்டணி உடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை.. பாஜக தமிழக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என கட்சிக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை இருந்தால் கூட்டணி அமைவது கஷ்டம் என்று டெல்லி இந்த முடிவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அண்ணாமலையின் சமீபத்திய பேட்டிகளும் கூட இதை உணர்த்துவதாகவே இருக்கின்றன. இன்னும் 2 வாரங்களில் நான் சாதாரண ஆளாக இருக்கலாம் என்றும் கூட அண்ணாமலை இக்கு வைத்து பேசி உள்ளார். அதோடு தலைவர் போட்டியில் நான் இல்லை என்றும் அண்ணாமலை நேற்று அறிவித்துவிட்டார். இதனால் இன்று அமித் ஷா தலைமையில் பாஜக புதிய மாநிலத் தலைவர் நியமனம் தொடர்பாக ஆலோசனை செய்யப்படுகிறது.
தமிழக பாஜகவில், தமிழக அரசியலில் கொரோனா சமயம் வரை ஆர்எஸ்எஸ் கை ஓங்கி இருந்தது. அப்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இருந்தார். இதற்கு பின் ஆர்எஸ்எஸ் இருப்பதாக கூறப்பட்டது. அதோடு முக்கியமாக குருமூர்த்தி கை ஓங்கி இருப்பதாக கூறப்பட்டது. அதாவது ரஜினியை அரசியலுக்கு கொண்டு வர குருமூர்த்தி காய் நகர்த்தி வருவதாக கூறப்பட்டது. தமிழக அரசியலில் இதன் மூலம் குருமூர்த்தி மீண்டும் கவனம் பெற தொடங்கி உள்ளார். இன்று நடக்கும் கூட்டத்தில் அமித் ஷா - குருமூர்த்தி தனியாக பேசுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இன்று மாலையே இவர்கள் ஆலோசனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மீட்டிங் நேரம் மாலைக்கு பதில் பிற்பகலுக்கு மாற்றப்பட்டு உள்ளது. அதோடு இல்லாமல் இந்த கூட்டத்தில் அண்ணாமலை, எல் முருகன் ஆகியோரும் சேர்க்கப்பட்டு உள்ளனர். எல் முருகன் - அண்ணாமலை - அமித் ஷா - குருமூர்த்தி ஆகிய நான்கு பேரும் இன்று ஆலோசனை செய்து வருகின்றனர்.
1 மணி நேரமாக இவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 1 மணி நேரமாக இவர்கள் தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர். ஒருங்கிணைந்த அதிமுக தொடர்பாக அமித் ஷா - குருமூர்த்தி ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications