“அதுக்கு தேர்தலில் நின்று அங்கீகாரம் பெறனும்!” தவெக குறித்து.. நயினார் நாகேந்திரன் சொன்னதை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் ஆணையத்தின் சார்பில் நடைபெறும் அனைத்து கூட்டங்களிலும், தமிழக வெற்றிக் கழகம் அழைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அக்கட்சியின் தலைவர் விஜய் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கும் கருத்து கவனம் பெற்றிருக்கிறது.

"தமிழ்நாடு முழுவதும் எங்கள் கட்சியை மக்கள் மத்தியில் பரவலாக கொண்டு சேர்த்து இருக்கிறோம். எதிர்வரும் தேர்தல்களில் மாநிலம் முழுவதும் நாங்கள் போட்டியிட இருக்கிறோம். ஒவ்வொரு குடிமகனின் குரலும் கேட்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், ஜனநாயக செயல்முறையை மேம்படுத்த நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

Vijay TVK BJP

எனவே அங்கீகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாத அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்வது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் அம்சம் என்பதை கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இதுவரை தேர்தல் ஆணையத்தின் அனைத்து ஆலோசனைக் கூட்டங்களிலும் தமிழக வெற்றி கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்படாமல் இருக்கிறது.

தேர்தல் தயார் செயல்முறைகள் தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நடத்தப்படும் ஆலோசனை கூட்டங்களில் எங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படாதது வாக்காளர்களின் கணிசமான பகுதியை விலக்கி வைக்கும் நடைமுறையாக இருக்கிறது. சுதந்திரமான நியாயமான தேர்தல் செயல் முறையை உறுதி செய்ய தேர்தல் ஆணையத்திற்கு எங்கள் கட்சி முழு ஒத்துழைப்பையும் கள நிலவரம் கருத்துக்களையும் வழங்க தயாராக உள்ளது.

எனவே இந்திய அரசியலமைப்பின் சரத்து 324 கீழ் உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தேர்தல் அதிகாரிக்குரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு அல்லது எதிர்வரும் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் கூட்டப்படும் அனைத்து ஆலோசனை கூட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் அழைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு எங்களது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்" என விஜய் தேர்தல் ஆணையத்திற்கு எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஒரேயொரு எம்எல்ஏ கூட இல்லாத கட்சியை எப்படி ஆலோசனைக்கு அழைக்க முடியும்? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், "தேர்தலை சந்தித்து அங்கீகாரம் பெற்றால் தான் கட்சிக்கு அழைப்பு கொடுப்பார்கள். இப்போதுதான் நீங்கள் கட்சியை தொடங்கி இருக்கிறீர்கள். கட்சியின் செயல்பாடுகளை பொறுத்துதான் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும்" என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+