அண்ணாமலை பதவி காலி.. தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு!
சென்னை: பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். பாஜக தலைவர் பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்துள்ளார். இவருக்கு மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்ய கட்சி தலைமை அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவரானார் நயினார் நாகேந்திரன். அவர் போட்டியின்றி அண்ணாமலை இடத்தை நிரப்ப உள்ளார். பாஜக மாநில தலைவர் ஆக 10 வருடம் கட்சியில் இருக்க வேண்டும். ஆனாலும் அது அடையாள விதிதான் கட்டாய விதி கிடையாது. இந்த நிலையில் அண்ணாமலை நீக்கப்பட்டு 8 வருடமாக கட்சியில் உறுப்பினராக இருக்கும் நயினார் அந்த இடத்தை பிடித்து உள்ளார்.
2023ல் அதிமுக பாஜக கூட்டணி உடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை.. தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

ஒரே ஜாதி
அண்ணாமலை இருந்தால் அதிமுக - பாஜக கூட்டணி அமைவது கஷ்டம் என்று டெல்லி இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. 2026 மாநிலத் தேர்தலில் கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றால் கூட்டணி நெருக்கமாக இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் முகமும் கவுண்டர் ஜாதியாக இருப்பதை பாஜக விரும்பவில்லை. எடப்பாடி அண்ணாமலை ஒரே ஜாதி. அதுவே பாஜகவிற்கு வேறு ஜாதியை சேர்ந்தவர் தலைவராக இருந்தால் அது கூட்டணிக்கு இன்னும் வலு சேர்க்கும். முக்கியமாக தென் மண்டலத்தில் கூட்டணிக்கு பலம் தரும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு அண்ணாமலையை மாற்ற ஒரு ஆலோசனை நடந்து உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலில் திமுகவின் வெற்றி சதவிகிதம் பல தொகுதிகளில் குறைவுதான். பாஜக வாக்கு சதவிகிதம்தான் பல இடங்களில் திமுக வெற்றிக்கு காரணம். அதிமுக - பாஜக சேர்ந்து இருந்தால் திமுகவை பல தொகுதிகளில் வெல்ல விடாமல் தடுத்து இருக்கலாம், என்று இவர்கள் பேசி உள்ளனர். இதையடுத்தே பாஜக தலைவர் பதவி மாற்றப்படலாம் என்கிறார்கள்.
ஜாதி ரீதியிலான இரண்டு கட்சியிலும் கவுண்டர்கள் இருந்தால் அது கூட்டணிக்கு பலன் தராது. அதனால் தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட ஜாதி பிரிவை சேர்ந்த நயினார் நாகேந்திரன் வந்தால் அது பாஜகவிற்கும் பலன், அதிமுக - பாஜக கூட்டணிக்கும் பலன் என்பதால் அவரை தலைவராக்க டெல்லி ஆலோசனை செய்கிறதாம். தென்மாவட்டங்களில் சரிவே பாஜக - அதிமுக கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணங்கள் ஆகும். அதோடு நயினார் நாகேந்திரன் அதிமுகவுடன் நட்பாக செல்ல கூடியவர்.
நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய சட்டமன்றக் கட்சித் தலைவராக உள்ளார். 19 மே 2001 முதல் 12 மே 2006 வரை தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் அதிமுக சார்பாக தமிழக அமைச்சராகப் பணியாற்றினார். அவர் 3 ஜூலை 2020 முதல் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு (TNBJP) துணைத் தலைவராக இருந்தார். அவர் 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் திருநெல்வேலி தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகவும், 2021 பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகவும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குருமூர்த்தி முடிவு
சென்னையில் குருமூர்த்தி இல்லத்தில் எல் முருகன் - அண்ணாமலை - அமித் ஷா - குருமூர்த்தி ஆகிய நான்கு பேரும் இன்று ஆலோசனை செய்தனர். இதில் பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரனை கொண்டு வருவதில் ஆர்எஸ்எஸ் தயக்கம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக அமித் ஷா இருந்ததாக கூறப்படுகிறது. அண்ணாமலை உள்ளிட்டோர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக பேசும் நிலையில் அமித் ஷா நயினார் நாகேந்திரன் பக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இடையே பாஜக அலுவலகம் வந்த நயினார் நாகேந்திரன் அலுவலகம் வாசலை தொட்டு வணங்கினார். இதையடுத்து பாஜக தலைவர் பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்து போட்டியின்றி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலைய வச்சு மாஸ்டர் பிளான்! பின்னணியில் பிரபலம்.. பாஜகவின் A டீமா? 50% டெல்லி ப்ளூபிரிண்ட் ரெடி -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள்












Click it and Unblock the Notifications