நயினார் நாகேந்திரன் மகனின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து.. மோசடி உறுதியானதால் அதிரடி!
சென்னை: பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேரந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாஜக சட்டமன்றக் குழு தலைவரும், பாஜக மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீநயினார் பாலாஜி தமிழ்நாடு மாநில பாஜக இளைஞர் அணி துணைத்தலைவாராக செயல்பட்டு வருகிறார்.

இவர் ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு வைத்தது. அவர் மோசடியாக பத்திரப்பதிவு செய்தது உறுதியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் ஆற்காடு சாலையில் உள்ள சுமார் 1.3 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை நயினார் பாலாஜி மோசடியாக ராதாபுரத்தில் பத்திரப்பதிவு செய்து முறைகேடு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரது பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி துணை பதிவுத்துறை தலைவர், இந்த பதிவு ரத்து செய்யப்படுவதற்கு முகாந்திரம் உள்ள ஆவணம் என தெரிவித்துள்ளதாகவும், இது தற்போது வில்லங்க சான்றிதழிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் தெரிவித்தது. இந்த புகார் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புகார் தொடர்பாக விசாரித்து, ராதாபுரம் மண்டல துணை பத்திரப்பதிவுத்துறை தலைவர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ஸ்ரீ நயினால் பாலாஜியால் மோசடியாக பதியப்பட்ட ரூ. 100 கோடி மதிப்பிலான பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications