பொள்ளாச்சி விவகாரம்: வரும்.. உண்மை விரைவில் வெளியே வரும்.. உற்சாகமாக பேட்டி கொடுத்த நக்கீரன் கோபால்
Recommended Video
சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் விரைவில் உண்மை வெளியே வரும் என நக்கீரன் கோபால் பேட்டி கொடுத்துள்ளார்.
பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழவைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நக்கீரன் கோபால் புலனாய்வு நடத்தி ஒரு ஆடியோவை வெளியிட்டார்.
அந்த ஆடியோவில் தன்னை பலாத்காரம் செய்ய வரும் ஒருவனிடம் அந்த பெண் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியும் விடாமல் அந்த மிருகம் வேட்டையாடியதால் அந்த பெண் அலறும் காட்சி பெண்களை பெற்றவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சோதனை
இந்த நிலையில் இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுவின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நக்கீரன் கோபால்
இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் விவரங்கள் சிபிஐ போலீஸாருக்கு கிடைத்ததாக தகவல்கள் எழுந்தன. இந்த நிலையில் சென்னை பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நக்கீரன் ஆசிரியர் கோபால் இன்று ஆஜரானார்.

சிபிஐ
அப்போது அவர் அந்த விவகாரம் தொடர்பாக சாட்சியம் அளித்து விட்டு வெளியே வந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நாங்கள் வெளியிட்ட ஆவணங்களை சிபிஐயிடம் சமர்ப்பித்தோம்.

உண்மை வரும்
இந்த வழக்கு தொடர்பான சாட்சியத்தை நான் அளித்துவிட்டு வந்தேன். எனவே இந்த விவகாரத்தில் உண்மை வெகு விரைவில் வெளியே வரும் என நக்கீரன் கோபால் தெரிவித்தார்.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக!












Click it and Unblock the Notifications