ஹெச்.ராஜா தோல்வி முகம்.. இருப்பை தக்க வைக்கும் விஜயதரணி - நக்கீரன் 'பரபர' சர்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற வாய்ப்புகள் உள்ள தொகுதிகளின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (மே.2) எண்ணப்படுகிறது. முடிவுகள் தெரிய எப்படியும் நள்ளிரவாகிவிடும் என்பதால், நகங்களை இப்போதே சுத்தப்படுத்தி, பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றனர் அரசியல் கட்சித் தலைவர்கள்.

பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் திமுக-வை கைக் காட்டுவதால், அமைச்சரவை வரை தயார் செய்து காத்திருக்கிறது அறிவாலயம். ஆளும் அரசோ, எது வந்தாலும் பாத்துக்கலாம் மூடுக்கு தயாராகிவிட்டது.

 15 தொகுதிகள்

15 தொகுதிகள்

இந்த நிலையில், நக்கீரன் தேர்தலுக்கு முன்பாக நடத்திய கருத்துக்கணிப்பில், தொகுதி வாரியாக எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என எடுத்த சர்வேவை வெளியிட்டுள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகளாக, பொன்னேரி (தனி), ஸ்ரீ பெரும்புதூர் (தனி), ஊத்தங்கரை (தனி), ஊட்டி, மயிலாடுதுறை, அறந்தாங்கி, காரைக்குடி, மேலூர், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), ஸ்ரீவைகுண்டம், தென்காசி, நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் போட்டியிடும் 25 தொகுதிகளில், 15ல் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக நக்கீரன் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 செல்வபெருந்தகைக்கே மகிழ்ச்சி

செல்வபெருந்தகைக்கே மகிழ்ச்சி

அசையும் சொத்து- ரூ. 1,09,000. அசையா சொத்து ஏதுமில்லை என்று சொத்துமதிப்பு காட்டிய பொன்னேரி (தனி) காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதாம். இங்கு அதிமுக வேட்பாளர் பலராமன் களத்தில் உள்ளார். அதேபோல், ஸ்ரீ பெரும்புதூர் (தனி) தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே. செல்வபெருந்தகைக்கே வெற்றி வாய்ப்பாம். இங்கு அதிமுக வேட்பாளர் கே. பழனி களத்தில் இருக்கிறார்.

 பாஜக - காங்கிரஸ்

பாஜக - காங்கிரஸ்

ஊத்தங்கரை தொகுதியில், அதிமுகவின் ஹாட்ரிக் வெற்றியை தடுத்து நிறுத்துகிறாராம் காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எஸ். ஆறுமுகம். இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்று, தொகுதியை கையில் வைத்திருக்கிறது அதிமுக. ஊட்டியில், பாஜக - காங்கிரஸ் நேரடியாக மோதுகிறது. காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே எம்எல்ஏ-வாக இருக்கும் ஆர். கணேஷ் களம் இறங்குகிறார். இங்கும் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாம்.

 பலப்பரீட்சை

பலப்பரீட்சை

மயிலாடுதுறையில் காங்கிரஸ்- பா.ம.க. நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்துகிறது. அதிமுக கூட்டணி சார்பில் பா.ம.க.வின் சித்தமல்லி ஏ.பழனிச்சாமி நிறுத்தப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ். ராஜகுமார் நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கே இங்கு வெற்றி வாய்ப்பு என்கிறது நக்கீரன் சர்வே. அறந்தாங்கி அதிமுக vs காங்கிரஸ் களம். அதிமுக முன்னாள் எல்எல்ஏ எம்.ராஜநாயகமும், காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ்.டி. ராமச்சந்திரனும் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். இங்கும் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாம்.

 மாமனாருக்கு வெற்றியாம்

மாமனாருக்கு வெற்றியாம்

காரைக்குடியில் பாஜக சார்பில் ஹெச்.ராஜாவும், காங்கிரஸ் சார்பில் எஸ்,மாங்குடி ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றன. இதில், ஹெச்.ராஜா தோல்வி முகம் காண்பதாக நக்கீரன் சர்வே தெரிவிக்கிறது. மேலூர் தொகுதியில் அதிமுக சார்பில் தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் பெரியபுள்ளான் மீண்டும் போட்டியிடும் நிலையில், காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரின் மாமனார் ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார். இங்கும் காங்கிரஸுக்கே வெற்றி என்கிறது நக்கீரன் சர்வே.

 ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஊர்வசி அமிர்தராஜ், அதிமுக சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி.சண்முகநாதனும் போட்டியிடுகின்றனர். இதில், காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் அலுவலகத்தில், சமீபத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில், இங்கு காங்கிரஸுக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடும் மோதல்

கடும் மோதல்

நாங்குநேரியில் அதிமுக சார்பில் கணேச ராஜாவும், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர். இங்கு, காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாம். அதேபோல், வெற்றியை கணிக்க முடியாத தொகுதியாக இருந்த குளச்சலில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில், நக்கீரன் சர்வேபடி குளச்சல் தொகுதி வேட்பாளர் பிரின்ஸ் வெற்றிப் பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நேரடி போட்டி

நேரடி போட்டி

அதேபோல், விளவங்கோடு தொகுதியில் போராடிப் பெற்ற சீட்டை விஜயதரணி தக்க வைப்பார் என்று தெரிகிறது. இங்கு, சொந்த கட்சிக்குள் நிலவும் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் அவர் தவித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு வெற்றி என்கிறது நக்கீரன் சர்வே. மேலும், கிள்ளியூர் தொகுதியில், இருமுனை போட்டியே நிலவுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடும் ராஜேஷ்குமாருக்கும், தமாகா சார்பில் இரட்டை இலை சின்னத்தில் களத்தில் நிற்கும் குமாரதாசின் மகன் ஜூட் தேவுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. எனினும், இங்கு காங்கிரஸ் வெல்லும் என்று சர்வே கூறுகிறது.

நக்கீரன் சர்வே காங்கிரஸுக்கு திருப்தி அளித்தாலும், மக்கள் தீர்ப்பு என்பது நாளை தான் தெரிய வரும். பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+