முன்கூட்டியே விடுதலை செய்ய உரிமையாக கேட்க முடியாது நளினி.. தமிழக அரசு
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என உரிமையாக கோர முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்கூட்டி விடுதலை செய்ய கோரி நளினி தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக உள்துறை செயலாளர் சார்பிலும், வேலூர் மகளிர் சிறை கண்காணிப்பாளர் சார்பிலும் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், நளினி உள்ளிட்ட 7பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு அளித்த பரிந்துரை, தமிழக ஆளுநரின் பரிசீலினையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது அரசின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது என தெரிவித்துள்ள தமிழக அரசு, ஆயுள் கைதிகள் தங்களை முன் கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என உரிமையாக கோர முடியாது என்றும், ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுக்க சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்வது, தண்டனை குறைப்பு போன்ற மாநில அரசு அதிகாரத்தை நீதிமன்றங்கள் செயல்ப்படுத்த முடியாது என்றும் முன் கூட்டி விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்கும்படி மட்டும் அரசுக்கு உத்தரவிட முடியும் எனவும் நளினியை முன் கூட்டி விடுதலை செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுப்பையா, சரவணன் அமர்வு, வழக்கை ஆகஸ்ட்20 தேதிக்கு தள்ளி வைத்தனர். தற்போது நளினி ஒரு மாத பரோலில் வெளியில் உள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications