Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நல்லகண்ணுவுக்கு ஹெல்த் எப்படி இருக்கு? மூச்சு விடுவதில் இயல்புநிலை! இன்று சாதாரண வார்டுக்கு மாற்றம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் இருந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மூத்த தலைவர் நல்லகண்ணு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .. தற்போது இயல்பாக மூச்சு விட துவங்கியிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு, கடந்த 22-ம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Nallakannu Health Government Hospital

தலையில் தையல்

தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவரை மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து வந்தனர்... இதனிடையே, வயது மூப்பு காரணமாக உடலில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சனைகளுக்காக நரம்பியல், நுரையீரல், இதய மருத்துவ நிபுணர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

நல்லகண்ணுவின் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.. "அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, இன்னும் ஓரிரு நாளில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்திருந்தது. மூச்சுக்குழாயில் ஏற்கனவே இருந்த அடைப்பை மருத்துவர்கள் நீக்கியிருக்கும் நிலையில், நல்லகண்ணு இயல்பாக மூச்சு விடுவதாக கூறப்படுகிறது.

அரசு பொதுமருத்துவமனை

இதனிடையே, நேற்று முன்தினம் இரவு நல்லகண்ணு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, மருத்துவக் குழுவினர் கண்காணித்து, தேவையான சிகிச்சையை அளித்து வருகின்றனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார்.

தற்போது நல்லகண்ணுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக கூறப்படுகிறது.. மூச்சு விடுவதில் சிரமம் இருந்த நிலையில், தற்போது இயல்பாக மூச்சுவிடுவதாகவும், இதையடுத்து இன்று சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூத்த தலைவர் முத்தரசன் மருத்துவமனைக்கு சென்று நல்லகண்ணு உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.. அத்துடன் நல்லகண்ணுவின் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

விரைவில் வீடு திரும்புவார்

டாக்டர்கள் ஜி.ஆர். ரவீந்திரநாத், ஏ.ஆர்.சாந்தி, தோழர் ஆர்.என்.கே. மகள் டாக்டர் ஆண்டாள் ஆகியோர் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.

நல்லகண்ணு விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மருத்துவமனைக்கு நேரில் சென்று நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

விசிக தலைவர் திருமாவளவனும் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.. தவெக தலைவர் விஜய்யும் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து போன் மூலம் விசாரித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மே 17 இயக்கப் பொதுச் செயலாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் மருத்துவமனை சென்று நலம் விசாரித்துள்ளனர்.

நேரில் வர வேண்டாம்

முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ''இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இப்போது உடல் நிலை சீராகியுள்ளது. 2 நாளில் குணமடைந்து வீடு திரும்புவார் என கூறும் மருத்துவர்கள், தற்போது அவரை நேரில் காண்பதற்கு சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவுக்கு நேரில் வருவதை தவிர்த்து உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். எனவே, அனைவரும் மருத்துவமனைக்கு நேரில் செல்வதை தவிர்த்து உதவ கேட்டுக்கொள்கிறோம்" என்று கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+