கோடிகளில் புரண்ட நாமக்கல் தொழிலதிபர்! மகளை ரூமில் பூட்டி, மனைவி மீது கருணையின்றி! போர்டிகோ சம்பவம்
சென்னை: தமிழகத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரித்தபடியே உள்ளன.. கணவனை மனைவி கொல்வது, மனைவியை கணவன் கொலை செய்வது, அல்லது இருவரில் யாராவது ஒருவர் கள்ளக்காதலுக்காக தாங்கள் பெற்ற குழந்தைகளையே கொல்வது என சொல்லமுடியாத அளவுக்கு அட்டகாசங்கள் தலைவிரித்தாடுகின்றன.. இந்நிலையில், நேற்றுமுன்தினம் கரூர், நாமக்கல் மாவட்டங்களில் நடந்த கொலை சம்பவம் அந்தந்த மாவட்ட மக்களை பதற வைத்து வருகிறது.
கரூர் மாவட்டம், கம்பிளியாம்பட்டியை சேர்ந்தவர் 35 வயது அய்யப்பன்.. இவரது மனைவி 25 வயது ராஜகுமாரி.. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

ராஜகுமாரிக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் இருந்துள்ளது.. இதனால் மனைவியை அய்யப்பன் கண்டித்தார்... ஆனாலும், கள்ளக்காதலனுடன் போனில் பேசுவதை மனைவி கைவிடவில்லை.. இதனால் ஆத்திரமடைந்த அய்யப்பன், மனைவி ராஜகுமாரியை கற்களாலேயே தாக்கியிருக்கிறார்.. இதில் மனைவி துடிதுடித்து இறந்துவிட்டார்.
கல்லாலேயே அடித்த கணவர்
கல்லாலேயே மனைவியை அடித்து கொன்ற இந்த சம்பவம் கரூரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.. அதற்குள் நாமக்கல்லிலும் ஒருவர், தன்னுடைய மனைவியை கொடூரமாக கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்.. என்ன நடந்தது நாமக்கல்லில்?
நாமக்கல்: நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி.. இவருக்கு 47 வயதாகிறது.. லாரி பாடி கட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பெயர் கலைச்செல்வி.. 37 வயதாகிறது.
இவர்களுக்கு 20 வயதில் மகேஸ்வரி என்ற பெண் உள்ளார்.. இந்த பெண், நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார்...
மன அழுத்தத்தில் கணவன்
இந்த தம்பதிக்கு தினேஷ்குமார் என்ற மகன் இருந்தார்.. ஆனார் அவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கிணற்றில் குளித்தபோது, தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார்.. மகன் இறந்ததிலிருந்தே பூபதி, கடுமையான மனவேதனையிலும், மன அழுத்தத்திற்கும் ஆளாகி வந்துள்ளார்.. கடைசியில் போதைக்கும் அடிமையாகிவிட்டார்.
போதை அதிகமாகிவிடவும், தினமும் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.. இந்நிலையில் நேற்று முன்தினமும் வழக்கம்போல் தம்பதிக்குள் சண்டை வலுத்து நள்ளிரவை தாண்டியும் நீடித்துள்ளது.. இந்த சண்டையை மகள் மகேஸ்வரி தடுக்க வந்துள்ளார்..
விடிகாலையில் போர்டிகோவில்
ஆனால், விடிகாலை நேரத்தில் மகள் மகேஸ்வரியை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டார் பூபதி.. பிறகு கூர்மையான ஆயுதத்தால் மனைவி கலைச்செல்வியின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார் பூபதி.. மனைவி இறந்ததை உறுதி செய்து கொண்டதுமே, போர்டிகோவில் மனைவியின் சேலையில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியில் என்ன நடக்கிறதென்று தெரியாமல், அறைக்குள்ளிருந்து மகள் அலறி துடித்துள்ளார்.. அவரது அலறல் சத்தம் கேட்டு, அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்... கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, கலைச்செல்வி ரத்த வெள்ளத்திலும், பூபதி தூக்கில் சடலமாகவும் தொங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஆசை ஆசையாக வளர்த்த மகன்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நாமக்கல் போலீசார், இருவரின் சடலங்களையும் கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
இந்த கொலையும், தற்கொலையும், நாமக்கல்லில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. ஆசையாக வளர்த்த செல்ல மகனைப் பறிகொடுத்த தகப்பன், மன அழுத்தத்திற்கு உள்ளாகி, போதைக்கும் அடிமையாகி, மனைவியையும் கொலை செய்து, தானும் தற்கொலை செய்திருப்பது நாமக்கல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications