நாமக்கல்லில் நடந்தது கிட்னி திருட்டு அல்ல.. இது கிட்னி முறைகேடு.. மா.சுப்பிரமணியன் கொடுத்த விளக்கம்!
சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு நடக்கவில்லை, கிட்னி முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மனித உறுப்புகளை அவர்களுக்கே தெரியாமல் எடுத்தால் தான் அது திருட்டு என்று கூறிய அவர், இன்னும் ஒரு வாரத்தில் கிட்னி முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குராமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வறுமையில் இருக்கும் விசைத்தறி தொழிலாளர்களைக் குறி வைத்து அவர்களிடம் இருந்து சிறுநீரகத்தைப் பெற்று முறைகேடாக விற்பனை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக மருத்துவ திட்டப் பணிகள் இயக்குநர் வினித் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு நடத்திய விசாரணையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய போலியான சான்றிதழ் வழங்கி அங்கீகாரம் அளிக்கும் அரசுக் குழுவை ஏமாற்றியது அம்பலமாகியது. இந்த விவகாரத்தில் 2 தனியார் மருத்துவமனைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யத் தமிழக அரசு தரப்பில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தனலட்சுமி ஸ்ரீனிவாசன், திருச்சி சீதா ஆகிய மருத்துவமனைகள் இனி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது. அதற்கான லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிட்னி மற்றும் மனித உறுப்புகளைத் திருடுகிறார்கள் என்று பேசி வருகின்றனர். இது திருடா அல்லது முறைகேடா என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மனித உறுப்புகளை அவர்களுக்கே தெரியாமல் கிட்னி உள்ளிட்டவை எடுத்தால் திருட்டு. ஆனால் இது முறைகேடு. இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டிலேயே நடந்திருக்கிறது. அப்போது காவல்துறை அதிகாரி நடவடிக்கை எடுத்து சிஎஸ்ஆர் நகல் கொடுத்துள்ளார். அதேபோல் காவல்துறை அதிகாரி தரப்பில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்ட போது, சுகாதாரத்துறை சார்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது சுகாதாரத்துறை தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு முதற்கட்ட அறிக்கை வந்துள்ளது. அதனடிப்படையில் 2 மருத்துவமனைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 வார கால விசாரணை முடிந்து முழுமையான அறிக்கை வந்தபின், துறை ரீதியாகவும், காவல்துறை மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். மனித உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு பல்வேறு விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வாரத்தில் இடைத்தரகர்கள் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்களோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் இன்னும் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதை அறியவே ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் நேரடியாகவும் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications