பள்ளிப்பாளையம் கிட்னி கேஸை சிபிசிஐடிக்கு மாற்றும் கோரிக்கையை ஏற்க மறுத்த கோர்ட்.. நாமக்கல் பரபரப்பு
சென்னை: நாமக்கல்லில் நடைபெற்ற கிட்னி திருட்டு விற்பனை விவகாரம் தொடர்பாக வழக்கை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு மாற்றும் தமிழக அரசின் யோசனையை ஏற்க மதுரை ஹைகோர்ட் மறுத்துவிட்டது. கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், பொதுமக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயத்தில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிட்னி விற்பனை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், அருள் முருகன் அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொள்ளவும், அதன் உறுப்பினர் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
பள்ளிப்பாளையம் - குழுவில் யார் யார் உள்ளனர்
மேலும், வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்கவும், அந்த குழுவில் யார் யார் இருக்கிறார்கள் என்ற விவரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பள்ளிபாளையம் காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "விதியின்படி ஊரக சுகாதார சேவைகளின் இயக்குநர் மட்டுமே இந்த விவகாரத்தில் விசாரித்து புகார் அளிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விதிகளோடு, BNS விதிகளின் அடிப்படையிலும் வழக்கு பதியலாமே?" என்றனர்..
சிறப்பு விசாரணை குழு
இதற்கு அரசுத்தரப்பில், "நீதிமன்ற உத்தரவின் காரணமாகவே இந்த முறை பின்பற்றப்படுகிறது. நீதிமன்ற உத்தரவால் மட்டுமே அரசின் கை கட்டப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணைக் குழுவை அமைப்பதில் அரசுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் சிபிசிஐடி துணைத்தலைவரே அதற்கான உறுப்பினர்கள் குறித்து முடிவு செய்வார்" என தெரிவிக்கப்பட்டது
அதற்கு நீதிபதிகள், "விசாரணைக்குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வழங்குமாறு குறிப்பிட்டு வழக்கை சிறிது நேரம் ஒத்திவைத்தனர்.
பிறகு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "சிறப்பு விசாரணைக்குழு உறுப்பினர்களின் பட்டியலை, அரசு வழக்கறிஞர் நீதிபதியிடம் வழங்கினார்.
எப்ஐஆர் எங்கே? உண்மைத்தன்மை என்ன?
இதையடுத்து நீதிபதிகள் சொல்லும்போது, "கிட்னி விற்பனை என்பது உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விதிகளுக்கு மட்டுமல்லாமல், BNS விதிகளின் படியும் தவறானது. ஆனாலும், இந்த விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை.
மனித உடல் உறுப்புகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக புகார் வந்துள்ளதால், உண்மை என்னவென்று தெரிந்துகொள்ள சரியான விசாரணை நடத்தப்பட வேண்டும் ஊரக சுகாதார சேவைகளின் இயக்குநர் புகார் அளித்தால் மட்டுமே, வழக்கு பதிவு செய்ய இயலும் என அரசு தரப்பில் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.
அரசு அமைத்த விசாரணை குழுவே, குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதை பதிவு செய்துள்ளது. பொதுமக்களின் வாழ்க்கை தொடர்பான விவகாரத்தில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்றே தெரிகிறது. இந்த வழக்கில் தமிழக அரசின் நடவடிக்கை நீதிமன்றத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குழு அமைக்க உத்தரவு
மக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயத்தில் அரசு சரியாக கவனம் செலுத்தவில்லை. இந்த வழக்கில் தமிழக அரசு நடந்து கொண்ட விதம் நீதிமன்றத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதுகுறித்து விசாரிக்க, பிரேமானந்த் சின்ஹா, நிஷா IPS, சிலம்பரசன் IPS, கார்த்திகேயன் SP அரவிந்த் SP மதுரை ஆகியோரை கொண்ட குழுவை நீதிமன்றம் அமைக்கிறது..
நாமக்கல்லில் நடைபெற்ற கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. அத்துடன் இந்த வழக்கை செப்டம்பர் 24ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மறுத்த நீதிபதிகள்
முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆஜராகி, தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு மாற்ற தயாராக உள்ளது என்றார்.. ஆனால், அதனை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.
அப்போது தலைமை குற்றவியல் வழக்கறிஞர், தாங்கள் சொன்னதை உத்தரவில் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் அதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications