நாஞ்சில் சம்பத்.. "நாஞ்சில் ஜம்பத்".. 3 மணி நேரம் ரூமில் அடைப்பு.. TRPயால் தவெகவுக்கு கெட்ட பேரு

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நாஞ்சில் சம்பத் பேசியதை ஏற்கவே முடியாது.. விவாதம் செய்வதற்கு தேர்ந்தெடுத்த நபரையும் சரியாக செய்யவில்லை.. நாஞ்சில் சம்பத் ஆபாசமாகவும், அநாகரீகமாகவும் பேசக்கூடியவர் என்பது அனைவருக்குமே தெரியும்.. இதுவரை எத்தனையோ கட்சிகளில் இருந்துள்ளார், அவருக்கு எதாவது பொறுப்பு தரப்பட்டுள்ளதா? தவெகவுக்காக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி, இப்போது அந்த கட்சிக்குதானே கெட்ட பெயர்" என்று கண்டனம் தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா.

Mancholai சேனலில் இதுகுறித்து சேகுவேரா தன்னுடைய கருத்துக்களை ஆவேசத்துடன் பதிவு செய்துள்ளார்... "நாஞ்சில் சம்பத் தமிழக அரசியலில் ஒரு சர்ச்சைக்குரிய ஆளுமையாகவே திகழ்கிறார். அவர் பல்வேறு அரசியல் கட்சிகளில் பயணித்து, இப்போதைக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ளார்..

Nanjil Sampath

நாஞ்சில் ஜம்பத்

ஒரு கட்சியில் நிலைத்து நிற்காதவர், 6 மாதங்களுக்கு ஒருமுறை தனது கட்சிப் பிடிப்பை மாற்றிக்கொள்பவர் என்று எல்லாருக்குமே தெரியும். இப்படி கட்சிக்கு கட்சிக்கு ஜம்ப் செய்வதால், இவரை நாஞ்சில் ஜம்பத் என்றே சொல்வார்கள்.

எங்கேயுமே தன்னை, திராவிட பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்திக் கொள்வார்.. ஆனால் நாஞ்சிர் சம்பத்துக்கு அரசியல் களத்தில் அடையாளம் கொடுத்தது மதிமுக தலைவர் வைகோ தான். வைகோவிற்குப் பிறகு அவர் அதிமுக, திமுக எனப் பல கட்சிகளில் பயணித்துள்ளார்.

நாக்கில் நரம்பில்லாமல்

ஆனால், எந்த கட்சியில் இருந்தாலும், அவர் தனது நாக்கைக் கட்டுப்படுத்தாமல் மற்ற கட்சித் தலைவர்களை மிக இழிவாகவும், அநாகரிகமாகவும் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இலக்கியம் பேசுவதாக மேடைகளில் முழங்கும் அவர், சக அரசியல் கட்சித் தலைவர்களின் இறப்பை முன்னிறுத்தி பேசுவது போன்ற தரக்குறைவான விமர்சனங்களை செய்வது அவரது பேச்சின் வரம்பற்ற தன்மையை காட்டுகிறது.

சீமான் போன்ற தலைவர்களை இழிவாகப் பேசுவதும், கலைஞரை தரக்குறைவாக விமர்சித்ததும் என உதாரணங்கள் இதற்கு உள்ளன.. நாஞ்சில் சம்பத்தின் இத்தகைய செயல்பாடுகள் பல நேரங்களில் அவர் சார்ந்திருக்கும் கட்சிக்கே அவப்பெயரைத் தேடித்தருகின்றன.

3 மணி நேரம் அறையில் அடைத்து..

நேற்று ஒரு விவாத மேடையில், நாஞ்சில் சம்பத் மிகவும் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியதால், அரங்கத்தில் இருந்த திமுகவினர் கொந்தளித்து வன்முறையில் இறங்கி விட்டார்கள்.. அங்கே வெறும் திமுகவினர் மட்டுமல்ல, சர்வ கட்சியை சார்ந்தவர்களும், இவர் மீது ஆத்திரம், கோபத்துடன்தான் இருந்தார்கள்..

இதனால், நிகழ்ச்சி முடியும் வரை நாஞ்சில் சம்பத்தை அங்கேயே சிறைப்பட்டது போல 3 மணி நேரம் ஒரு அறையில் அடைத்து வைத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பிறகுதான், ரகசியமாக அங்கிருந்து அவர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்படியொரு நிலைமை இவருக்கு தேவையா?

ஒரு தலைவரை இழிவாக பேச வைத்துவிட்டு, அதன் பிறகு நிகழ்ச்சியில் "நீங்க இப்படி எல்லாம் பேசக்கூடாது" என்று பஞ்சாயத்து செய்வது போன்ற செயல்கள் அந்த மீடியாவின் திட்டமிட்ட செயல்.. "மக்கள் மன்றம்", "விவாதம்" என்ற பெயரில் தலைவர்களைக் கூப்பிட்டு உட்கார வைத்து அசிங்கப்படுத்துவது அரசியல் தரத்தை மிகவும் தாழ்ந்து போகச் செய்துவிட்டது,

கெட்ட வார்த்தை சொன்ன நாஞ்சில் சம்பத்

ஒரு மேடையில் கொட்டப்பட்ட வார்த்தையை, நிகழ்ச்சி முடிந்த பிறகு திரும்பப் பெறவோ அல்லது சரி செய்யவோ முடியாது.. இதுக்கெல்லாம் காரணம் ஊடகங்கள் தான்.

விவாதம் செய்வதற்கு தேர்ந்தெடுத்த நபரையும் சரியாக செய்யவில்லை.. நாஞ்சில் சம்பத் ஆபாசமாகவும், அநாகரீகமாகவும் பேசக்கூடியவர் என்பது அனைவருக்குமே தெரியும்.. இதுவரை எத்தனையோ கட்சிகளில் இருந்துள்ளார், அவருக்கு எதாவது பொறுப்பு தரப்பட்டுள்ளதா? தவெகவுக்காக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி, இப்போது அந்த கட்சிக்குதானே கெட்ட பெயர் வந்துவிட்டது..

டிஆர்பி ரேட் வேட்டை

ஆரம்ப காலத்தில் மிகக் குறைந்த ஊதியத்திற்கு மேடைகளில் பேசி வந்த நாஞ்சில் சம்பத், காலப்போக்கில் தனது வருமானத்தை அதிகரித்துக் கொண்டார். முதலில் 5 ஆயிரம், 10 ஆயிரத்துக்கு மேடையில் பேசி கொண்டிருந்தவர், இப்போது 50,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பெறுவதாக கூறப்படுகிறது. ஆனால், இவரது வருவாய் அதிகரித்துள்ளதே தவிர, பேச்சின் தரத்தை மேம்படுத்தவில்லை.

தனது விசுவாசத்தை காட்டிக்கொள்வதற்காக, மற்ற தலைவர்களை மோசமாக பேசக்கூடாது. இதுபோன்ற அநாகரிகமான பேச்சுக்களால் பொதுமக்களிடையே அரசியல் மீதான அதிருப்திதான் மேலோங்குகிறதே தவிர, எந்தவிதமான அரசியல் முதிர்ச்சியும் வெளிப்படுவதில்லை.

மீடியாக்களில் டிஆர்பிக்காக இத்தகைய நபர்களை மேடையில் உட்கார வைப்பதும், அதன் மூலம் அரசியல் விவாதங்களின் தரம் வீழ்ச்சியடைவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது" என்று வேதனை தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+