இந்தா ஆரம்பிச்சிட்டாங்கல்ல! தவெக மேடையில் கடுப்பான நாஞ்சில் சம்பத்.. நிர்வாகிகளை கடிந்து.. பரபரப்பு
சென்னை: தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், மேடையிலேயே தவெகவினரை கடிந்து கொண்டதால் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், தான் பேசிக் கொண்டிருக்கும்போது மேடையில் நின்ற தவெக நிர்வாகிகள் பேசிக்கொண்டே இருந்ததால் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசுகையில், "திமுகவிற்காக வரும் இளைஞர்கள் அனைவரும் தலா ரூ.1000 கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள். ஆனால், தவெகவிற்காக வரும் இளைஞர்கள் அனைவரும் விஜய்க்காக தன் உயிரையும் தர தயாராய் இருப்பவர்கள். விஜய்யை எம்ஜிஆராக பார்க்கும் அதிமுகவினர் அலை அலையாய், அணி அணியாய் தவெகவில் இணைந்து வருகின்றனர்." என்றார்.

நாஞ்சில் சம்பத் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது மேடையில் நின்ற தவெக நிர்வாகிகள் பேசிக்கொண்டே இருந்தனர். அவருக்குப் பின்னால் நின்றபடி தவெகவினர் பேசிக்கொண்டே இருந்ததால் கடுப்பான நாஞ்சில் சம்பத், அவர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
திமுகவில் பேச்சாளராக வலம் வந்த நாஞ்சில் சம்பத் திமுகவிலிருந்து வைகோ வெளியேறிய போது அவருடன் இணைந்து வெளியேறினார். வைகோ மதிமுகவை தொடங்கிய பிறகு மதிமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் பிற்காலத்தில் வைகோவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகினார்.
கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாஞ்சில் சம்பத், ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் ஐக்கியமானார். நாஞ்சில் சம்பத்திற்கு ஜெயலலிதா அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியை அளித்தார். மேலும் கட்சிப் பணிகளுக்காக அவருக்கு இன்னோவா கார் ஒன்றும் வழங்கப்பட்டது.
ஆனால் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி அவர் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டார். பின்னர், திமுக ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தார். திமுக மேடைகளில் திராவிட இயக்க செயற்பாட்டாளராகப் பேசி வந்தார் நாஞ்சில் சம்பத். சில திரைப்படங்களிலும் நடித்தார்.
கடந்த 5 ஆம் தேதி தவெக அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார் நாஞ்சில் சம்பத். அவருக்கு தவெகவ பரப்புரை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, தவெக மேடைகளில் உரையாற்றி வருகிறார் நாஞ்சில் சம்பத்.
-
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications