திமுகவிடம் நான் எதையும் கேட்கவில்லை! கேட்டாலும் சைக்கிள் கூட கிடைக்காது- நாஞ்சில் சம்பத்
சென்னை: எந்த பரிந்துரைக்கும் நான் திமுகவிடம் போய் கேட்கவில்லை, அப்படியே கேட்டாலும் ஒரு சைக்கிள் கூட கிடைக்காது என தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
திராவிட பேச்சாளரான நாஞ்சில் சம்பத், தவெகவில் இணைந்துள்ளார். அவர் செய்தியாளர்கள சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் உங்கள் ஃபேன் என விஜய் கூறியதும் எனக்கு மெய்சிலிர்த்துப் போனேன்.

கடந்த 6 ஆண்டுகளாக நான் எந்த கட்சியிலும் இல்லை. பெரியார், அண்ணா லட்சியங்களை பேசி வந்த நான் இன்று தவெகவில் இணைந்துள்ளேன். நாடு முழுவதும் பரப்புரை செய்ய விஜய் எனக்கு அனுமதி தந்துள்ளார்.
திமுக ஆதரவாளராக இருந்த என்னை ஒரு விழாவில் கரு பழனியப்பன் விமர்சித்தார். அது போல் தி.க. வீரமணியும் என்னை மேடையில் ஒரு மாதிரி பேசிவிட்டார். மேலும் ஒரு டிவி டிபேட்டில் விஜய் சரியான பாதையில் பயணிக்கிறாரா என கேட்டனர். அதற்கு ஆம் என்றேன். அது முதல் எனக்கு அறிவாயலத்தில் இருந்து பிரச்சனைகள் வந்தன.
என்னை திமுகவினர் வசைபாடி வந்தார். திமுக நடத்திய அறிவுத் திருவிழாவில் வேண்டுமென்றே என்னை தவிர்த்தார்கள். நான் திமுகவிடம் எதையும் கேட்டு நின்றதில்லை. அப்படியே கேட்டாலும் சைக்கிள் கூட கிடைக்காது.












Click it and Unblock the Notifications