ஸ்டாலினுக்கு பக்கத்தில் அன்பில் மகேஷ்..150 கோடிக்கு கட்சியை விற்ற பிரேமலதா! விளாசிய நாஞ்சில் சம்பத்!
சென்னை: தமிழகத்தில் திமுகவுக்கு விலை போன கட்சிகளுக்கு மத்தியில் பயம் காட்டிய கட்சி தமிழக வெற்றிக் கழகம் எனவும், உதயநிதி ரசிகர் மன்றத்தின் தலைவர் என்ற ஒரே தகுதியை வைத்து அன்பில் மகேஷ் பொய்யாமொழியை முதல்வர் ஸ்டாலினுக்கு அருகே அமர வைத்துள்ளார்கள் என தவெக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தென்காசி மத்திய மாவட்டம் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய நாஞ்சில் சம்பத்," தமிழகத்தில் இதுவரை திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சியில் அமர்ந்து உள்ளனர். இவர்கள் மீது இருந்த வெறுப்பு காரணமாக கடந்த தேர்தல்களில் 35 சதவீத மக்கள் தங்கள் ஓட்டுக்களை கூட போடவில்லை. இந்நிலையில் திமுகவை எதிர்த்து 1994 இல் வைகோ மதிமுகவை தொடங்கி இப்போது அறிவாலயத்தில் முடங்கி விட்டார்.

நாஞ்சில் சம்பத் பேச்சு
அவருக்கு பின்னர் ஜிகே மூப்பனார் தமிழ் மாநில காங்கிரசை தொடங்கி இந்திரா காந்தியால் பாராட்டு பெற்றவர். இப்போது அவரின் மகன் ஜிகே வாசன் மிகக் குறைந்த தொகைக்கு மோடியிடம் விலை போய்விட்டார். பின்னர் திமுகவை எதிர்த்து கருப்பு எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் தேமுதிக தொடங்கினார் கட்சிக்கு இப்போது 0.27 சதவீத ஓட்டுகளே உள்ளது. விஜயகாந்த் கட்டிய கல்யாண மண்டபத்தை திமுக திட்டமிட்டு இடித்து தரைமட்டம் ஆக்கியது. இப்போது விஜயகாந்தின் சமாதியை அங்கு வைத்துள்ள பிரேமலதாவிற்கு இந்த உண்மை தெரிந்தும் 150 கோடியை வாங்கிக்கொண்டு திமுகவிற்கு விலை போய் விட்டார்.
கமலஹாசன்
திமுகவை எதிர்ப்பதாக காட்டிக் கொண்டு டிவி பெட்டியை உடைத்துக் கொண்டு மக்கள் நீதி மையத்தை கமலஹாசன் ஆரம்பித்தார். அவரும் இப்போது அறிவாலயத்தின் திண்ணையில் படுத்து கிடக்கிறார். பிரபாகரின் பேரை சொல்லி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் ஈனத் தமிழன் சீமான் திருச்சியில் இன்று தனது கட்சியின் இறுதி மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் விஜய் செல்லும் இடம் எல்லாம் நாம் தமிழர் கட்சி சமாதி அடைந்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம்
தமிழகத்தில் திமுகவை எதிர்த்து துவங்கப்பட்ட கட்சிகள் அனைத்தும் சரணாகதி அடைந்து விட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தளபதி விஜய் அரசியல் எதிரியாக திமுகவையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் ஏற்றுக்கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி திமுகவிற்கு பயத்தை காட்டியுள்ளார். விஜயின் பின்னால் ஒரு கோடி இளைஞர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்திற்கு எந்த சாதி சாயலும் மதத்தின் சாயலும் கிடையாது. நான் பல மேடைகளையும் பலரையும் அரசியலில் பார்த்தவன் ஆனால் இதுவரை விஜய்க்கு கூடிய கூட்டம் எந்த அரசியல் கட்சிக்கும் கூடியது கிடையாது.
இன்பநிதி - உதயநிதி
விஜயின் ஜனநாயகன் படத்திற்கு எதிராக சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி படத்தை வெளியிட்டு தோல்விதான் மிச்சம். இதன் மூலம் தமிழகத்தில் விஜய்க்கு அதிக ஆதரவு உள்ளது என்பது நிரூபணம் ஆகி உள்ளது. சிவகார்த்திகேயனை முடக்கியது போல் தற்போது ரஜினிகாந்தையும் கமலஹாசனையும் முடக்குவதற்காக இன்பநிதி உதயநிதி வைத்து சினிமா எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.. நடிகர் வடிவேலு பிரபலமாக இருந்த நிலையில் விஜயகாந்துக்கு எதிராக அவரை பேச வைத்து அவரின் சினிமா வாழ்க்கையை முடித்து வைத்தவர்கள் திமுகவினர்.
அன்பில் மகேஷ்
எந்தக் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருந்தால் திமுக குடும்பத்திற்கு பிடிக்காது. தமிழகத்தில் திமுகவை எதிர்த்து புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஐந்து ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தார். பேரறிஞர் அண்ணா காங்கிரஸ் கட்சியை எதிர்த்து 18 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தார் ஆனால் விஜய் கட்சி ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிப்பார். அண்ணாவின் புதல்வன் பரிமளத்தின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் சபை முன்னவர் இருக்கும் இடத்தில் பிடிஆர் பழனிவேல் ராஜனையோ, தங்கம் தென்னரசுவையோ, கேஎன் நேருவையோ, ஐ பெரியசாமியையோ அமர அனுமதிக்காத திமுக, உதயநிதி ரசிகர் மன்றத்தின் தலைவர் என்ற ஒரே தகுதியை வைத்து அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அமர வைத்துள்ளார்கள்" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications