மோடியை தோற்கடிக்க வேண்டும்.. வேலையை பார்க்கும் ஆர்எஸ்எஸ்.. சொல்றது யாருன்னு பாருங்க!
சென்னை: ஆர்எஸ்எஸ் அமைப்பில் மோடிக்கு எதிராக அதிருப்தியில் இருக்கிறார்கள். பாஜக தலைவர்களை மோடி ஒதுக்கி வருவதை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. அதனால்தான் இந்த முறை ஆர்எஸ்எஸ் தேர்தல் பணிகளை செய்யவில்லை. மோடியை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை, என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன் இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் - பாஜக இடையே உரசல் நிலவுவதாக வரக்கூடிய செய்திகளுக்கு இடையே பாஜக தலைவர் ஜேபி நட்டா, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து பாஜக கட்சி தனியாக சுதந்திரமாக வளர்ந்துள்ளதாகவும், இனி ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளார்.

பாஜகவின் தேசிய தலைவரே இப்படி நேரடியாக ஆர்எஸ்எஸ் பற்றி குறிப்பிட்டு இருப்பது தேசிய அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக 2024 லோக்சபா தேர்தலுக்கு நடுவில் இந்த பேச்சு வந்திருப்பதுதான் அதிக விவாதத்தை ஏற்படுத்துகிறது.
ஏற்கனவே மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் இருந்து பாஜகவிற்கு சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வர தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுதான் ஆர்எஸ்எஸ் உறவை பாஜக முறிக்க காரணம் என்றும் கூறப்படுகிறது. பத்தாண்டுகள் மத்தியில் பாஜகவும், உத்தரபிரதேசத்தில் ஏழு ஆண்டுகளும் ஆட்சியில் இருந்த நிலையில், ஆர்எஸ்எஸ் வட்டாரங்களில் பாஜக மீது அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. மத்திய, மாநில அரசாங்கம் "அவர்களுடையது" என்ற போதிலும், தற்போது உத்தர பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் பணியாளர்கள் பெரிதாக தேர்தல் பணிகளை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
பேட்டி: ஆர்எஸ்எஸ் - பாஜக இடையே நடக்கும் மோதல் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன் இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், பாஜகவில் மோடிக்கு எதிராகவே வேலை செய்கிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பில் மோடிக்கு எதிராக அதிருப்தியில் இருக்கிறார்கள். மோடிக்கு எதிராக திட்டமிட்டு வேலை பார்க்கிறார்கள். மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு வேலை பார்க்கிறார்கள். பாஜகவில் சிறந்த தலைவர்.. மிக சிறந்த தலைவர் வாஜ்பாய். பாஜகவின் மிக மென்மையான தலைவர் அவர். அப்படி ஒரு தலைவரை பாஜகவில் பார்க்க முடியாது.
அவர் தன்னை முன்னிறுத்தியது இல்லை. ஆனால் மோடி தன்னை முன்னிறுத்துகிறார். இப்போதும் கூட அவர் தன்னை முன்னிறுத்துக்கொள்கிறார். பாஜகவிலேயே இதை பலரும் விரும்பவில்லை. மோடி தன்னை மட்டும் முன்னிறுத்துவதை பாஜகவிலேயே சிலர் விரும்பவில்லை. இதனால்தான் பாஜகவில் மோடிக்கு எதிராகவே வேலை செய்கிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பில் மோடிக்கு எதிராக அதிருப்தியில் இருக்கிறார்கள்.
வாஜ்பாய் போல மோடி கட்சியை முன்னிறுத்தவில்லை. மோடி கட்சிக்கு உள்ளேயே பலரை வீழ்த்தி உள்ளார். நிதின் கட்கரியை காலி செய்யவே அவருக்கு எதிரான சிஏஜி அறிக்கையை வெளியிட்டனர். அவருக்கு எதிராக ரிப்போர்ட் வர காரணமே மோடிதான். நிதின் கட்கரியை காலி செய்யவே இப்படி எல்லாம் மோடி செய்துள்ளார். இதனால்தான் கட்சிக்கு உள்ளேயே பலர் மோடிக்கு எதிராக உள்ளனர். மோடியை மேலும் வளர்க்க ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை.
பாஜக தலைவர்களை மோடி ஒதுக்கி வருவதை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. அதனால்தான் இந்த முறை ஆர்எஸ்எஸ் தேர்தல் பணிகளை செய்யவில்லை. மோடியை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை, என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன் இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications