உலக பாலிட்டிக்ஸ் ஓஞ்சாலும் கூட.....வழிகாட்டு குழுவில் திண்டுக்கல் சீனிக்கு இடம்-நத்தம் புறக்கணிப்பு!
சென்னை: அதிமுகவில் வழிகாட்டுதல் குழுவில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சீனிவாசனுக்கு இடம் கிடைத்திருக்கிறது; ஆனால் மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு இடம் கிடைக்காதது புகைச்சலை தந்திருக்கிறது.
அதிமுகவில் அக்கப்போரை முடிவு கட்டத்தான் முதல்வர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு எல்லாம் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்போது வழிகாட்டுதல் குழுவை முன்ன்வைத்து அடுத்த ஆட்டம் தொடங்கி இருக்கிறது.

அதிமுக வழிகாட்டும் குழு
அதிமுக வழிகாட்டுதல் குழுவில் ஈபிஎஸ் அணியின் 6 பேரும் ஓபிஎஸ் அணியின் 5 பேரும் இடம்பெற்றுள்ளனர். ஓபிஎஸ் அணியில் இருந்துவந்த மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக்கப்பட்டார். இதனால் அவர் எடப்பாடி அணிக்கு தாவினார்.

ஈபிஸ் அணியில் நத்தம்
அண்மையில் ஈபிஎஸ்- ஓபிஎஸ் மோதல் வெடித்த போது, எடப்பாடியாரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நத்தம். அங்கு பேச்சுவார்த்தை நடத்திவிட்டுத்தான் பின்னர் ஓபிஎஸ் இல்லத்துக்கே வந்தார் நத்தம். இதேபோல பலரும் ஓபிஎஸ் அணிக்கு குட்பை சொல்லிவிட்டு சென்றுவிட்டனர்.

பரிதாபத்தில் அன்று நத்தம்
நத்தம் விஸ்வநாதனுக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுத்து அவருக்கு அரசியலில் 2-வது அத்தியாயத்தை தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. அதுவரை திண்டுக்கல் அதிமுகவில் சீந்துவார் இல்லாதவராக ஓரம்கட்டப்பட்டுக் கிடந்தார் நத்தம். அவரது பிறந்த நாளுக்கு கூட போஸ்டர் ஒட்ட ஆள் இல்லாத பரிதாப நிலைமை இருந்தது.

நத்தத்துக்கு ஆதரவு அதிகம்
இப்போது எல்லாமே தலைகீழ்.. திண்டுக்கல் மேற்கு மாவட்டத்துக்கு சீனிவாசன் என்றால் கிழக்கு மாவட்டத்துக்கு நத்தம்.. திண்டுக்கல் மாவட்டங்கள் அரசியலில் நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர்கள் திடீரென மீண்டும் விஸ்வரூபம் எடுத்துவிட்டனர். இன்னமும் சொல்லப்போனால் ஆதரவாளர்கள் எண்ணிக்கையில் நத்தம் விஸ்வநாதனுக்குத்தான் இப்போது அதிக ஆதரவு.

ஜெயித்த சீனிவாசன்
இந்நிலையில் அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவில் எப்படியோ திண்டுக்கல் சீனிவாசனுக்கு இடம் கிடைத்துவிட்டது. அங்கிட்டும் இங்கிட்டுமாக மோதிப் பார்த்த நத்தம் விஸ்வநாதன் திராட்டில்விடப்பட்டிருக்கிறார். இதனை திண்டுக்கல் சீனிவாசன் தரப்பு உள்ளூர பார்த்து அகமகிழ்ந்து கொண்டிருக்கிறது என்கின்றன திண்டுக்கல் அதிமுக வட்டாரங்கள்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications