எல். முருகனா இப்படி செய்தார்.. பாஜக கொடி கம்பத்தில்.. தேசிய கொடியேற்றியதாக..போலீஸில் ஷாக் புகார்!
பாஜக மாநில தலைவர் எல் முருகன் மீது புகார் எழுந்துள்ளது
சென்னை: பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தேசிய கொடியை அவமதித்து விட்டாராம்.. அதாவது காவி நிற பாஜக கொடி கம்பத்தில், தேசிய கொடியை ஏற்றிவிட்டதாக கமிஷனர் ஆபீஸ் வரை புகார் சென்றுள்ளது.
சுதந்திர தினத்தன்று, தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநில தலைவர் எல்.முருகன் தேசிய கொடியை ஏற்றி வைத்திருக்கிறார்.. இந்த நிகழ்ச்சியில் மாநில பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவசாசன், மூத்த தலைவர் இல.கணேசன் உட்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.

அங்கு தேசிய கொடியை எல்.முருகன் ஏற்றி வைத்துள்ளார்.. அந்த போட்டோவை தன்னுடைய ஃபேஸ்புக்கிலும் பதிவிட்டுள்ளார்.. அதை பார்த்தபோதுதான், கொடிகம்பம் மாறிவிட்டது தெரியவந்துள்ளது.. இது சம்பந்தமாக சென்னை முகப்பேரை சேர்ந்த ருகேஷ் என்பவர் கமிஷனர் ஆபிசில் ஒரு புகார் மனு தந்துள்ளார்.
அதில் உள்ள சுருக்கம் இதுதான்: "ஒவ்வொரு இந்திய குடிமகனும் உயிராக மதிக்கும் நம் நாட்டின் பெருமதிப்பிற்குரிய மூவர்ண தேசிய கொடியை திட்டமிட்டு அவமதிக்கும் நோக்கத்தில் பாஜக கொடியேற்றக்கூடிய காவி மற்றும் பச்சை வர்ணம் ஏற்றப்பட்ட கொடி கம்பத்தில், நம்முடைய பெரு மாண்பிற்கும், மரியாதைக்குமுரிய தேசிய மூவர்ண கொடியினை வேண்டுமென்றே தங்களுடைய கட்சியின் வர்ணம் ஏற்றப்பட்ட கொடி கம்பத்தில், நம் தேசிய கொடியை ஏற்றி நம் நாட்டின் மாண்பையும், நம்மடைய தேசிய கொடியின் மாண்பையும் சீர்குலைத்து உள்ளனர்.

மேலும் மேற்கண்ட இத்தகு செயலினை பாஜகவின் மாநில தலைவரான எல்.முருகன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்து அக்கட்சி கொடியையும், நாம் வணங்கும் தேசிய கொடியையும் ஒருமித்ததாக தீய எண்ணத்துடன் காண்பித்தது மக்கள் மத்தியில் பரப்பி நம் தேசிய கொடியையும் நம் நாட்டின் மாண்பையும் அவமானப்படுத்தி மற்றும் சீர்குலைத்துள்ளார்.
எனவே பாஜக அரசியல் கட்சி காவி மற்றும் பச்சை வர்ணம் ஏற்றப்பட்ட கொடி கம்பத்தில் நம் நாட்டின் மாண்பு மிக்க தேசிய கொடியை ஏற்றி அதன் மாண்பை சீர்குலைத்த சட்டம் படித்த மற்றும் கற்றறிந்த வழக்கஞர்களான மாநில பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன், முன்னாள் அமைச்சர் இல.கணேசன் மற்றும் இந்த குற்ற செயல்களுக்கு உடந்தையாக இருந்த அக்கட்சியின் நிர்வாகிகள் மீது தேசிய கொடியினை அவமதிப்பு செய்த காரணத்திற்காக அவர்கள் மீது சட்டப்படி விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு இரு கை கூப்பி கேட்டுக் கொள்கிறேன்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை என்றால் சும்மாவா.. பாஜக ஆஃபர் தந்தும் ஏற்கலயாமே? உடையும் ஓட்டு? இன்று 12 மணிக்கு என்னாகுமோ -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்!












Click it and Unblock the Notifications