நயன்தாரா முதல் தனுஷ், சந்தானம் வரை.. மாறாத போயஸ் கார்டன் ஏக்கம்.. காலம் மாறிய கதை
சென்னை: இன்றைக்கு பல நடிகர், நடிகைகள் போயஸ் கார்டனில் வீடு வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். போயஸ் கார்டன் என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு, ரஜினிகாந்த் வாழ்ந்து வரும் வீடு இருக்கிறது. இன்றைக்கு பல முன்னணி நடிகர், நடிகைகள், போயஸ் கார்டனில் வீடு வாங்குவதை பெருமையாகவும் கவுரவமாகவும் கருதி வாங்கி வசிக்கிறார்கள். போயஸ் கார்டனை பொறுத்தவரை மற்ற பகுதிகளை போல் இல்லை.. அங்கு நிலத்தின் மதிப்பு என்பது , ஏரியாவை தாண்டி, யார் யார் வசிக்கிறார்கள் என்பதை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.
சென்னையில் பிரபல தொழில் அதிபர்கள், நடிகர், நடிகைகள் என பெரிய விஐபிக்கள் அதிகம் வாழும் பகுதி என்றால் தேனாம்பேட்டையில் உள்ள போயஸ் கார்டன் பகுதி தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு, நடிகர் ரஜினி காந்த் வீடு, சசிகலா வீடு, நடிகர் தனுஷ் வீடு, தொழில் அதிபர் இந்திரா நூயி, தினத்தந்தி உரிமையாளர் சிவந்தி ஆதித்தனார் வீடு உள்பட பல்வேறு தொழில் அதிபர்கள் வீடுகள் போயஸ் கார்டனில் உள்ளது. இதேபோல் நடிகை நயன்தாரா வீடு, ஜெயம் ரவி வீடு, விஜய் ஆண்டனி வீடு, அட்லீ வீடும் போயஸ் கார்டனில் இருக்கிறது.

விவிஐபிக்கள் வாழும் போயஸ் கார்டன்
அண்மையில் நடிகர் சந்தானமும் போயஸ் கார்டனில் வீடு வாங்கி உள்ளார். இப்படி பல திரைப்பிரபலங்கள் போயஸ் கார்டனில் வீடு சென்னையில் முக்கியமான இடத்தில் இருக்கிறது என்பது மட்டும் காரணமல்ல.. ரஜினிகாந்த் மற்றும் ஜெயலலிதா காரணம் என்று சொல்லாம். அவர்களின் வீட்டை பார்த்து மிரண்ட பலருக்கும் போயஸ் கார்டனில் பிரம்மாண்டமான பங்களாகட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அந்த ஆசையில், அந்த ஏக்கத்தில் வீடு வாங்கியவர்களே அதிகம். போயஸ் கார்டன் என்பது விவிஐபிக்கள் வாழும் பகுதியாக இன்றும் இருக்கிறது.
80களில் போயஸ் வரலாறு
ஆனால் 80களில் தான் போயஸ் கார்டன் வரலாறே ஆரம்பிக்கிறது. சத்தியநாராயணன் என்பவர் தான் போயஸ் கார்டன் இடத்தையே பிளாட் போட்டு விற்றதாக கூறப்படுகிறது. அந்த மாதிரி பிளாட் வாங்கியவர்கள் தான் இப்போது அங்கு இருக்கிறார்கள்.. சத்தியநாராயணன் பிளாட் போடும் முன்பு அந்த இடம் காடாக இருந்துள்ளது. அங்க உள்ளே இரண்டு நீச்சல் குளம் இருந்தது. ஐந்து வெள்ளைக்காரர்களின் வீடு இருந்தது. நான்கு வீடு இடிக்கப்பட்டது.. இப்போதும் ஒரு வெள்ளைக்காரர் வீடு இருக்கிறது. போயஸ் கார்டன் முழுவதும் 1980களில் வீடுகள் கட்டியிருக்கிறார்கள். ரஜினிகாந்த், ஜெயலலிதா ஆகியோர் அப்போதுதான் அங்கு வீடு கட்டி குடியேறினார்கள்.இப்போது சந்தானம் வரை அங்கு குடியேறிவிட்டார்கள்.
வடபழனி, ராமாவரம்
போயஸ் கார்டனில் வீடு என்பது ஒரு கவுரவமாக பார்க்கப்படுகிறது. வீடு எங்கு என்ற கேள்விக்கு ஒருவர் தரும் பதிலே அவருக்கு மதிப்பை இந்த சமூகம் நிர்யணிக்கிறது. அதேநேரம் போயஸ்கார்டனை போல் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் மிளிர்ந்த ராமவரம் இன்றைக்கு அடியோடு மாறிவிட்டது. ஒரு காலத்தில் சினிமாக்காரர்கள் பலருக்கும் வடபழனியில் வீடு வாங்குவது தான் கனவாக இருந்தது. ஆனால் இன்றைக்கு அந்த எண்ணமே மாறிவிட்டது. இன்றும் பல சினிமா நட்சத்திரங்கள் வடபழனி, விருகம்பாக்கம், சாலி கிராமத்தில் தான் வசிக்கிறார்கள். ஆனால் காலம் செல்ல செல்ல மாறியது. இப்போது ஈசிஆரில் குடியேறிவிட்டார்கள்.
ஈசிஆர் வீடுகள்
நடிகர் அஜித்குமார், நடிகர் விஜய் ஆகியோர் ஈசிஆரில் வசிக்கிறார்கள். அங்கு வடபழனியைவிடவும், ஏன் தேனாம்பேட்டையைவிடவும் நிலத்தின் மதிப்பும், வீட்டின் மதிப்பும் கற்பனை செய்ய முடியாத விலையில் இருக்கிறது. ஒரு காலத்தில் கோயம்பேடு எப்படி இருந்தது.. அதன் அருகில் இருந்த அண்ணா நகர் மிகப்பெரிய விவிஐபி ஏரியாக இருக்கிறது. ஆனால் பாரிமுனை, அண்ணா நகர், கோயம்பேடு, ராமவரம், தேனாம்பேட்டையையும் விடவும் ஈசிஆரின் மதிப்பு அதிகமாகி விட்டது. தற்போது தாம்பரம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. வரும் காலத்தில் இங்குமே மதிப்பு மாற வாய்ப்பு உள்ளது.
காலமே தீர்மானிக்கும்
அதேநேரம் ரியல் எஸ்டேட் துறையை பொறுத்தவரை, சென்னையில் நிலத்தின் மதிப்பு என்பது இடம் எங்கு உள்ளது என்பதை தாண்டி, யார் யார் குடியிருக்கிறார்கள் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.. காலம் ஒவ்வொரு ஊரின் மதிப்பையும் மாற்றிக்கொண்டே இருக்கிறது. போயஸ் கார்டனை பொறுத்தவரை பிரபலங்கள் குடியிருந்த அந்த பிரம்மாண்ட மாளிகைகள் அங்கிய நாமும் குடியேற வேண்டும் என்ற அந்த ஏக்கம் இன்று பலருக்கும் நிறைவேறி உள்ளது. அதேநேரம் இப்போது போயஸ் கார்டனுக்கு உள்ள மதிப்பு 20 வருடங்களுக்கு பிறகு இருக்குமா என்றால்.. நிச்சயம் மில்லியன் டாலர் கேள்வி தான்...












Click it and Unblock the Notifications