ஊதா நிற சேலையில் நயன்தாரா.. கல்லூரி விழாவில் அரங்கமே அதிர்ந்த பேச்சு.. அப்படி என்ன பேசினார்?
பெற்றோர்களுடன் தினமும் 10 நிமிடங்களாவது செலவு செய்யுங்கள்- நடிகை நயன்தாரா அட்வைஸ்
சென்னை: பெற்றோர்களுடன் தினமும் 10 நிமிடங்கள் நேரத்தை செலவு செய்யுங்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சி என நடிகை நயன்தாரா அறிவுறுத்தியுள்ளார்.
டயானா மரியம் குரியன் என்ற இயற்பெயர் கொண்டவருக்கு இரு இயக்குநர்கள் நயன்தாரா என்ற பெயரிட்டார். மனசினக்காரே எனும் படத்தின் போது இயக்குநர் ரஞ்சன் பிரமோத்தும் சத்யன் அன்டிக்காடும் சேர்ந்து நிறைய பெயர்கள் கொண்ட லிஸ்ட்டை டயானா மரியத்திடம் கொடுத்தனர்.
அப்போது அவரே செலக்ட் செய்து கொண்ட பெயர்தான் நயன்தாரா. இந்த பெயர் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதால் அந்த பெயரையே தனக்கு வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாராம். அத்தகைய நயன்தாரா தமிழில் ஐயா எனும் படத்தில் அறிமுகமானார்.

காதல் தோல்வி
அதற்கு அடுத்து அவருக்கு காதல் தோல்வி, படங்களில் வாய்ப்பு இல்லாமல் போனது என மிகப் பெரிய பிரளயத்தையே தன் வாழ்வில் சந்தித்துவிட்டார். பின்னர் தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு அவருக்கு சினிமாவில் ஏறுமுகம்தான். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தார்.

ஹீரோயின்
ஹீரோயின் என்றால் ஹீரோக்களுடன் 4 பாட்டுக்கு நடனம் ஆடுவது, கவர்ச்சி காட்டுவது என்பதை உடைத்தெறிந்தார். ஹீரோயினிஸம் கதைகளை தேர்வு செய்து நடித்தார். அந்த வகையில் கோலமாவு கோகிலா படத்தில் காமெடியன் யோகிபாபுவுடன் நடித்திருந்தார். அது போல் இமைக்கா நொடிகள் என்ற படத்திலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சப்ஜெக்ட்டில் நடித்திருந்தார்.

மூக்குத்தி அம்மன்
மூக்குத்தி அம்மன், நெற்றிக் கண், ஓ2, அறம், காத்துவாக்குல இரண்டு காதல் கனெக்ட் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது முதல் முறையாக ஷாரூக் கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற படத்தில் அறிமுகமாகிறார் நயன்தாரா. 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது.

7 ஆண்டுகள்
இருவரும் 7 ஆண்டுகள் காதலித்த பின்னர் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரு குழந்தைகள் உள்ளனர். வாடகைத் தாய் மூலம் குழந்தை என்பதை இந்த தம்பதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னர் நிறைய விவாதங்கள் நடந்தன. அதாவது ஜூன் 9ஆம் தேதி கல்யாணம் நடந்தது. அக்டோபர் 9ஆம் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்ததாக விக்னேஷ் சிவன் அறிவிக்கிறார்.

நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள்
அப்படியென்றால் நயன்தாரா திருமணத்தின் போது 6 மாத கர்ப்பிணியாக இருந்திருக்க வேண்டும், ஆனால் புகைப்படங்களை பார்த்தால் அவ்வாறு இல்லை. எனவே அவர் வாடகைத் தாய் சட்டத்தில் விதிகளை மீறியிருந்திருக்க வேண்டும் என விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாக மருத்துவ குழுவினர் அமைக்கப்பட்ட நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் வாடகைத் தாய் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே 2016 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தனர். எனவே வாடகைத் தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்ற விவகாரத்தில் எந்த விதிகளும் மீறப்படவில்லை என தெரியவந்தது.

லேடி சூப்பர்ஸ்டார்
இவ்வாறு லேடி சூப்பர்ஸ்டாராக உள்ள நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் அம்பாசிடராக உள்ளார். அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த கல்லூரி விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் எப்போதும் லைஃப்ல ஹேப்பியா இருங்க. ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுக்காதீங்க. எப்படி இருந்தாலும் எல்லாரும் லைஃப்ல சக்ஸஸ்ஃபுல்லா இருப்பீங்க.

சக்ஸஸ்
அந்த சக்ஸஸ் நாளைக்கு வரும் போது அன்று வருத்தப்பட்ட நேரங்கள் குறித்து கவலை கொள்வீர்கள். கல்லூரியில் படிக்கும்போது நண்பர்களளுடன் ஜாலியாக இருக்கலாம், கல்லூரி வாழ்க்கை மகிழ்வானது, இந்த நேரத்தில் நீங்களள் யாருடன் பழகுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். கல்லூரி நாட்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்திற்கானது என்பதை மறந்துவிடாதீர்கள்.

10 நிமிடங்கள்
கல்லூரி முடிந்து வெற்றி அடைந்த நபராக மாறினாலும் பணிவாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். உங்கள் பெற்றோர்களுக்காக தினமும் 10 நிமிடங்களையாவது செலவழியுங்கள். அதில்தான் அவர்களது மகிழ்ச்சி இருக்கிறது என்றார். நயன்தாரா ஊதா நிறத்தில் டிரான்ஸ்பாரண்ட் சேலை அணிந்திருந்தார். கல்லூரி விழாவில் லைட்டுகள் அணைக்கப்பட்டு செல்போன் வெளிச்சம் காட்டப்பட்டு நயன்தாராவுக்கு மாணவர்கள் வரவேற்றனர்.

விக்னேஷ் சிவன் தாய் மீனா குமாரி
விக்னேஷ் சிவனின் தாய் மீனாகுமாரி காவல் துறையில் உள்ளார். அவர் தனது மருமகள் நயன்தாரா குறித்து ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: நயன்தாரா வீட்டில் சமையல் செய்வது, துணி துவைப்பது, அயர்ன் செய்வது, தோட்டக் கலை கவனித்து கொள்வது என 4 ஆண்கள், 4 பெண்கள் என 8 பேர் பணியாற்றி வருகிறார்கள். அவர் வீட்டிற்கு நாங்கள் போயிருந்தோம். அப்போ அந்த 8 பேரில் நீண்ட காலமாக நயன்தாரா வீட்டில் பணியாற்றிய ஒரு அம்மா மிகவும் சோகமாக இருந்தார். அதை கவனித்த நயன்தாரா என்னம்மா ஏன் சோகமாக இருக்கீங்கள் என கேட்டார். அதற்கு அந்த அம்மா 4 லட்சம் கடன் தனது கழுத்தை நெருக்குவதாக தெரிவித்து அழுதார். உடனே எதுவும் யோசிக்காத என் மருமகள் நயன்தாரா, அவ்வளவுதானே, 4 லட்சம் நான் தரேன் என கூறி உடனே பணத்தை எடுத்து கொடுத்தார்.

நயனின் அம்மாவும் சொக்கத் தங்கம்
நயன்தாராதான் இப்படி என பார்த்தால் அவரது தாயும் சொக்கத் தங்கமாக இருக்கிறார். நயன்தாரா வீட்டிற்கு நாங்கள் சென்றபோது அவரது வீட்டில் அவரது அம்மா இருந்தார். ஆனால் நயன் இல்லை. அப்போது இதே போல் ஒரு பணிப்பெண் கஷ்டப்படுவதை பார்த்துவிட்டு உடனடியாக கையில் போட்டிருந்த 2 தங்க வளையல்களை அப்படியே கழற்றி கொடுத்தார். யாருக்கு இது போன்ற மனம் வரும் என மருமகளையும் சம்பந்தியையும் மீனாகுமாரி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications